பதிவு செய்த நாள்
08 ஜூலை2018
00:15

புதுடில்லி;ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், முகேஷ் அம்பானியின்பதவிக் காலம், மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மும்பையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின், 41வது, ஆண்டு பொதுக் குழு கூட்டம், இரு தினங்களுக்கு முன் நடைபெற்றது. இதில், ரிலையன்ஸ் பங்கு முதலீட்டாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில், முகேஷ் அம்பானி, ‘ஜியோகிகா பைபர்’ கம்பிவட அகண்ட அலைவரிசை சேவை, ‘ஜியோபோன் 2’ வெளியீடு உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதையடுத்து, நிறுவனத்தின் செயல் திட்டங்கள் தொடர்பான தீர்மானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, பங்குதாரர்கள் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டன. அவற்றில், முகேஷ் அம்பானியின் பதவிக் காலத்தை, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க செய்யும் தீர்மானத்திற்கு ஆதரவாக, 98.5 சதவீதமும், எதிராக, 1.48 சதவீத ஓட்டுகளும் விழுந்தன.
இதன்படி, 2019, ஏப்.,19 முதல், முகேஷ் மேலும் ஐந்து ஆண்டுகள், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக பொறுப்பு வகிப்பார். இவருக்கு தற்போது 61 வயது ஆகிறது. இதன்படி, 66 வயது வரை அவர் இப்பதிவியில் நீடிப்பார்.
ஊதியம்
முகேஷ் அம்பானிக்கு ஆண்டு ஊதியமாக, 4.17 கோடி ரூபாய் வழங்கப்படும் என, தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், 59 லட்சம் ரூபாய்க்கு, அலவன்ஸ் மற்றும் இதர சலுகைகள் பெறலாம். இதில், ஓய்வூதிய பலன்கள் சேர்க்கப்படவில்லை.இத்துடன், நிறுவனத்தின் நிகர லாப அடிப்படையிலான, ‘போனஸ்’ தொகையும், முகேஷ் அம்பானிக்கு கிடைக்கும்.
மேலும், பணி தொடர்பான பயணத்தில், மனைவி, உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கான செலவுகள்; வாகன செலவு மற்றும் இல்லத்தில் தொலைதொடர்பு சேவைகளுக்கு செய்த செலவுகளை, திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.முகேஷ் அம்பானி மற்றும்அவர் குடும்பத்தினருக்கான நிறுவனத்தின் பாதுகாப்பு செலவினம், சலுகையாக கருதப்படாது.இக்கூட்டத்தில், பங்குகளாக மாறாத கடன் பத்திரங்கள் உள்ளிட்டவற்றின் மூலம், 20 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டும் தீர்மானத்திற்கும்ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், இத்தொகை எதற்காக பயன்படுத்தப்படும் என்பது தெரிவிக்கப்படவில்லை.
கடந்து வந்த பாதை
பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி, எண்ணெய் சுத்திகரிப்பு உள்ளிட்ட தொழில்களில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஈடுபட்டுள்ளது.இந்நிறுவனத்தின் இயக்குனர் குழுவில், 1977ல், முகேஷ் அம்பானி இணைந்தார்.இவர் தந்தை, திருபாய் அம்பானி, 2002, ஜூலை, 6ல் மறைந்ததை தொடர்ந்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக, முகேஷ் அம்பானி பொறுப்பேற்றார்.
சகோதரர் அனில் அம்பானி, துணை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார்.இந்நிலையில், 2005ல், கருத்து வேறுபாடு காரணமாக, சகோதரர்கள் வர்த்தகத்தை பிரித்துக் கொண்டு, தனித் தனியாக இயங்கத் துவங்கினர். இதையடுத்து, பிரதான நிறுவனமான, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசின் முழு கட்டுப்பாடும், முகேஷ் அம்பானி கைக்கு வந்தது.தொலைத்தொடர்பு, நிதி, காப்பீடு, பொழுதுபோக்கு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த துணை நிறுவனங்கள், அனில் அம்பானிக்கு கிடைத்தன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|