தமிழகத்தின் 25 பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயக்கம்தமிழகத்தின் 25 பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயக்கம் ...  உங்களுக்காக காத்திருக்கிறது தாய்லாந்து! கோவை தொழிற்துறையினருக்கு அழைப்பு உங்களுக்காக காத்திருக்கிறது தாய்லாந்து! கோவை தொழிற்துறையினருக்கு ... ...
தமிழகத்தில் விரைவில் புதிய ஜவுளி கொள்கை ஈரோட்டில் அமைச்சர் தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2018
00:37

ஈரோடு:‘‘தமி­ழ­கத்­தில், விரை­வில் புதிய ஜவுளி கொள்கை அறி­விக்­கப்­படும்,’’ என, கைத்­தறி மற்­றும் துணி நுால் துறை அமைச்­சர் மணி­யன் பேசி­னார்.
கைத்­தறி ஆத­ரவு திட்ட கலந்­து­ரை­யா­டல் கூட்­டம், ஈரோட்­டில் நேற்று நடந்­தது. கைத்­தறி துறை முதன்மை செய­லர், பணீந்­திர ரெட்டி தலைமை வகித்­தார். இதில், கைத்­தறி நெச­வா­ளர், ஜவுளி உற்­பத்­தி­ யா­ளர், கூறிய யோச­னை­கள் வரு­மாறு:
* கைத்­த­றி­யில் உற்­பத்­தி­யா­கும் ரகங்­களை, விசைத்­த­றி­யில் உற்­பத்தி செய்­வதை தடுத்து, நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.* ஜவுளி டிசைன் அமைக்க, அதிக செல­வா­கா­ம­லும், புதிய டிசைன்­கள் கிடைக்­கும் வகை­யி­லும், திறன் வாய்ந்த தொழி­லா­ளர்­களை உரு­வாக்க வேண்­டும். அதற்கு தேவை­யான பயிற்­சி­கள் வழங்க வேண்­டும்.* பாடத்­திட்­டங்­க­ளு­டன், நெச­வை­யும் சேர்த்து, பயிற்சி தர வேண்­டும்.* தேவை­யான இடங்­களில் பொது கழிவு நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யம் அமைத்து, பூஜ்ய சுத்­தி­க­ரிப்­புக்கு உதவ வேண்­டும். வெளி மாநி­லங்­க­ளுக்கு அனுப்பி, பிரின்­டிங், சாய­மி­டு­தல் பணி செய்­வ­தால், கூடு­தல் செல­வா­கிறது. இதற்­கான வாய்ப்பை அரசே ஏற்­ப­டுத்த வேண்­டும்.* அனைத்து நெச­வா­ளர்­க­ளுக்­கும், நுால் மானி­யம் கிடைக்க செய்ய வேண்­டும்.இவ்­வாறு வலி­யு­றுத்­தி­னர்.பின்­னர், கைத்­தறி மற்­றும் துணி நுால் துறை அமைச்­சர் மணி­யன் பேசி­ய­தா­வது:

கைத்­தறி ஆத­ரவு திட்­டத்­துக்கு, 40 கோடி ரூபாய் ஒதுக்­கப்­பட்டு, புதிய மாற்­றம், ஆராய்ச்சி, மேம்­பாடு செய்­யப்­ப­டு­கிறது. இதற்­காக, நெச­வா­ளர்­கள், ஜவுளி துறை சார்ந்­த­வர்­க­ளி­டம் கருத்து கேட்­கப்­ப­டு­கிறது.கைத்­தறி ஆத­ரவு திட்­டம் மூலம், புதிய ரகம், டிசைன் உரு­வா­கும். நெச­வா­ளர்க­ளுக்கு தொடர்ந்து வேலை, லாபம், சம்­ப­ளம் கிடைக்­கும். நுகர்­வோர் விரும்­பும் உற்­பத்­தியை, அதி­க­ரிக்க வாய்ப்பு தரப்­படும்.
புதிய ரகங்­க­ளுக்கு வணிக ஒத்­து­ழைப்பு, ரகத்­துக்கு பெயர் ஏற்­ப­டுத்­து­தல், உற்­பத்தி மூல­த­னத்­தின் பெய­ரில் கடன் வழங்­கு­தல் செயல்­ப­டுத்­தப்­படும்.ஜமக்­கா­ளம் உட்­பட சில ரகங்­க­ளுக்­கான, ஜி.எஸ்.டி., வரி, 12 சத­வீ­தத்­தில் இருந்து, 5 சத­வீ­த­மாக அல்­லது முழு­மை­யாக நீக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.
தமி­ழக அர­சால் புதிய ஜவுளி கொள்கை வகுக்­கப்­பட்டு, இறுதி வடி­வம் கொடுக்­கப்­ப­டு­கிறது. விரை­வில், முதல்­வர் அறி­விப்­பார். பொது சுத்­தி­க­ரிப்பு நிலை­யம் அமைத்து, ஜவுளி துறை ஊக்­கப்­ப­டுத்­தப்­படும். நெச­வா­ளர்­க­ளுக்­கும், ஏ.டி.எம்., கார்டு கிடைக்க வழி செய்­யப்­படும். நெச­வா­ளர்­க­ளுக்­கான புதிய காப்­பீட்டு திட்­டம் விரை­வில் அம­லா­கும்.இவ்­வாறு அவர் கூறி­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)