உங்களுக்காக காத்திருக்கிறது தாய்லாந்து! கோவை தொழிற்துறையினருக்கு அழைப்பு உங்களுக்காக காத்திருக்கிறது தாய்லாந்து! கோவை தொழிற்துறையினருக்கு ... ... பட்டாணி விலை கிலோவுக்கு ரூ.4 உயர்வு பட்டாணி விலை கிலோவுக்கு ரூ.4 உயர்வு ...
வீடுகளுக்கு குழாய் மூலம், ‘காஸ்’ 15 நகரங்களுக்கு ரிலையன்ஸ் விண்ணப்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2018
00:43

புது­டில்லி:ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ், அதன் துணை நிறு­வ­னம் மூலம், 15 நக­ரங்­களில், வீடு­க­ளுக்கு குழாய் மூலம் சமை­யல் காஸ் சப்ளை செய்ய, உரி­மம் கோரி­யுள்­ளது. இதன் மூலம், முதன் முறை­யாக, எரி­வா­யு­வின் சில்­லரை விற்­ப­னை­யி­லும், ரிலை­யன்ஸ் கால் பதிக்­கிறது.
மத்­திய அரசு, வீடு­க­ளுக்கு குழாய் மூலம் காஸ் சப்ளை செய்­யும் திட்­டத்தை, பர­வ­லாக விரி­வு­ப­டுத்தி வரு­கிறது.

இலக்கு

குழாய் மூலம் சமை­யல் காஸ் பயன்­ப­டுத்­தும் இல்­லங்­களை, தற்­போது உள்­ளதை விட, மூன்று மடங்கு உயர்த்தி, 2020ல், 1 கோடி­யாக அதி­க­ரிக்க, இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது.தவிர, அடுத்த சில ஆண்­டு­களில், எரி­பொ­ருள் பயன்­பாட்­டில், இயற்கை எரி­வா­யு­வின் பங்கை, தற்­போ­தைய, 6 சத­வீ­தத்­தில் இருந்து, 15 சத­வீ­த­மாக உயர்த்­த­வும் திட்­ட­மிட்­டுள்­ளது.
இதற்­காக, குழாய் மூலம் இல்­லங்­க­ளுக்கு காஸ் சப்ளை செய்­வது; வாக­னங்­க­ளுக்­கான, சி.என்.ஜி., எனப்­படும் அழுத்­தப்­பட்ட இயற்கை காஸ் விற்­பனை ஆகி­ய­வற்­றுக்கு ஏலம் மூலம் உரி­மம் வழங்­கப்­பட்டு வரு­கிறது.இது­வரை, எட்டு முறை நடை­பெற்ற ஏலத்­தில், 91 பகு­தி­க­ளுக்கு, இயற்கை காஸ், சி.என்.ஜி., சப்ளை உரி­மம் வழங்­கப்­பட்­டுள்­ளது.
இதை, இந்­தி­ர­பி­ரஸ்தா காஸ், கெயில் உள்­ளிட்ட நிறு­வ­னங்­கள் பெற்று, காஸ் சப்­ளை­யில் ஈடு­பட்­டு உள்ளன.

தமிழகம்

இந்­நி­லை­யில், 9வது ஏலத்­திற்­கான அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டது. இதில், தமி­ழ­கம், மத்­திய பிர­தே­சம் உள்­ளிட்ட எட்டு மாநி­லங்­களில், 86 பகு­தி­களில், குழாய் மூலம் காஸ் சப்ளை மற்­றும், சி.என்.ஜி., விற்­ப­னைக்கு விண்­ணப்­பங்­கள் கோரப்­பட்­டன.இதில், ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ் நிறு­வ­னம், அதன் துணை நிறு­வ­ன­மான, இந்­தியா காஸ் சொல்­யூ­ஷன்ஸ் மூலம், 15 நக­ரங்­களில், குழாய் மூலம் காஸ் சப்ளை செய்­யும் உரி­மத்­திற்கு விண்­ணப்­பித்­துள்­ளது.இதன் மூலம், ரிலை­யன்ஸ், காஸ் சில்­லரை விற்­ப­னை­யி­லும் கால் பதிக்­கிறது.

இந்­தியா காஸ் சொல்­யூ­ஷன்ஸ் நிறு­வ­னத்­தில், பிரிட்­ட­னைச் சேர்ந்த, பி.பி., நிறு­வ­னம், 50 சத­வீத பங்கை கொண்­டுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.இந்­தி­ர­பி­ரஸ்தா காஸ் நிறு­வ­னம், 13 நக­ரங்­க­ளுக்­கும், எஸ்­ஸெல் இன்ப்­ரா­பு­ரா­ஜெக்ட்ஸ், 7 நக­ரங்­க­ளுக்­கும், உரி­மம் கோரி விண்­ணப்­பித்­துள்ளன.நேற்­று­டன், விண்­ணப்ப காலம் முடி­வ­டைந்­தது. ‘இந்த ஏலம் மூலம், 70 ஆயி­ரம் கோடி ரூபாய் முத­லீ­டு­கள் குவி­யும்’ என, பெட்­ரோ­லி­யம் மற்­றும் இயற்கை எரி­வாயு ஒழுங்­கு­முறை வாரி­யம், தெரி­வித்­துள்­ளது.

சேலம் – கோவை
குழாய் மூலம் வீடு­க­ளுக்கு காஸ் வினி­யோ­கிக்­கும் உரி­மத்­திற்­கான விதி­மு­றை­கள், சீர­மைக்­கப்­பட்­டுள்ளன.உரி­மம் வழங்­கப்­பட்­ட­தில் இருந்து, எட்டு ஆண்­டு­க­ளுக்கு அளிக்க வேண்­டிய காஸ் அளவு, 30 சத­வீ­தம் உயர்த்­தப்­பட்­டுள்­ளது.முந்­தைய ஏலங்­களில், போட்டி கார­ண­மாக, நிறு­வ­னங்­கள், ஒரு யூனிட் எரி­வா­யு­விற்கு, 1 பைசா என, வழங்க முடி­யாத விலையை குறிப்­பிட்­டன. இதை தவிர்க்க, 1 கிலோ சமை­யல் எரி­வா­யு­விற்கு, 30 ரூபாய்; சி.என்.ஜி.,க்கு, 2 ரூபாய் என, அடிப்­படை கட்­ட­ணம் நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த ஏலத்­தில், தமி­ழ­கத்­தில், சேலம் மற்­றும் கோவை மாவட்­டங்­கள் இடம் பெற்­றுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)