பதிவு செய்த நாள்
14 ஜூலை2018
00:47

புதுடில்லி:‘ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டியை மீண்டும் உயர்த்தும்’ என, டி.பி.எஸ்., நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:நாட்டின் சில்லரை பணவீக்கம், ஜூன் மாதம், 5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, ஐந்து மாதங்களில் இல்லாத உயர்வாகும்.இந்நிலையில், கச்சா எண்ணெய் விலையேற்றம், ரூபாய் மதிப்பின் சரிவு, விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு போன்ற காரணங்களால், பணவீக்கம் மேலும் உயரும் என, தெரிகிறது.அவ்வாறு அதிகரிக்கும்பட்சத்தில், நிதிச் சந்தை செயல்பாடுகளில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த, ரிசர்வ் வங்கி முயலும்.
அதனால், ஆகஸ்ட் துவக்கத்தில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு வெளியிடும் அறிக்கையில், ரெப்போ வட்டி, 0.50 சதவீதம் உயர்த்தப்படலாம். அதுமட்டுமின்றி, நடப்பு நிதியாண்டு முடிவிற்குள், ரெப்போ விகிதம் மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கி, கடந்த மாதம், ரெப்போ வட்டியை, 0.25 சதவீதம் உயர்த்தி, 6.25 சதவீதமாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|