பதிவு செய்த நாள்
14 ஜூலை2018
00:48

சென்னை:‘‘சென்னையில், பேங்க் ஆப் இந்தியாவின், மியூச்சுவல் பண்டு முதலீடு, ஏழு மாதங்களில், 50 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது,’’ என, வங்கியின், மியூச்சுவல் பண்டு பிரிவின் மூத்த மேலாளர், சவுரப் கட்டாரியா தெரிவித்தார்.
இது குறித்து, அவர் சென்னையில் நேற்று கூறியதாவது:சென்னையில், பி.ஓ.ஐ.,யில், 2017ம் ஆண்டு ஜூன் மாதம் வரை, மியூச்சுவல் பண்டு முதலீடு, 30 ஆயிரத்து, 200 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2018ம் ஆண்டு ஜனவரியில், 80 ஆயிரத்து, 190 கோடி ரூபாயாக உயர்ந்தது.இதன் மூலம், ஏழு மாதங்களில், 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு அதிகரித்துள்ளது. இது, மும்பையை விட, 6,000 கோடி ரூபாய் அதிகம். சென்னையில், மியூச்சுவல் பண்டு சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
பங்குச் சந்தை முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கிறது என்பதால், மியூச்சுவல் பண்டு திட்டத்தில் அதிகமானோர் முதலீடு செய்கின்றனர். நகரங்களில், மியூச்சுவல் பண்டு முதலீடு பற்றி அதிக விழிப்புணர்வு உள்ளது.கிராமப்புறங்களில் குறைவாக இருப்பதால், அங்கு கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
மியூச்சுவல் பண்டு திட்டத்தில், தற்போது புதிய புதிய திட்டங்கள் அறிமுகமாகி வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|