பதிவு செய்த நாள்
14 ஜூலை2018
00:53

பெங்களுரு:நடப்பு 2018 -– 19ம் நிதியாண்டின், ஏப்., – ஜூன் வரையிலான முதல் காலாண்டில், இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம், 3.7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3,612 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது, கடந்த, 2017- – 18ம் நிதியாண்டின், இதே காலாண்டில், 3,483 கோடி ரூபாயாக இருந்தது.இதே காலத்தில், நிறுவனத்தின் வருவாய், 12 சதவீதம் அதிகரித்து, 17,078 கோடியில் இருந்து, 19,128 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.நடப்பு நிதியாண்டில், நிறுவனத்தின் வருவாய், வளர்ச்சி, 6 –- 8 சதவீதமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிறுவனத்தின் இயக்குனர் குழு, பங்கு ஒன்றுக்கு, ஒரு போனஸ் பங்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. அதுபோல, ஒரு ஏ.டி.எஸ்., பங்கிற்கு ஈடாக, அதே பங்கு வழங்கப்படும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.பங்கு முதலீட்டாளர்களுக்கு, 2,600 கோடி ரூபாய் சிறப்பு டிவிடெண்டு உட்பட, 13 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என, கடந்த ஏப்ரலில் இன்போசிஸ், தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐ.டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|