பதிவு செய்த நாள்
14 ஜூலை2018
15:39

புதுடில்லி : அலிபாபா குழும நிறுவனர் ஜேக் மாவை பின்னுக்கு தள்ளி, ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரராக முகேஷ் அம்பானி உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில், ஜியோ ஜிகா ஃபைபர் எனப்படும் வீடுகளுக்கான பிராட்பேண்ட் சேவை உள்ளிட்ட புதிய வணிகத் திட்டங்களை முகேஷ் அம்பானி அண்மையில் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் பங்குகளின் மதிப்பு 1.6 சதவீதம் அளவுக்கு நேற்று உயர்ந்ததை அடுத்து, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 44.3 பில்லியன் டாலர்களாக அதிகரித்தது. அதேசமயம், சீனாவை சேர்ந்த அலிபாபா குழுமத்தின் நிறுவனர் ஜேக் மாவின் சொத்து மதிப்பு 44 பில்லியன் டாலர்களாக உள்ளது.
இதனையடுத்து தற்போது நிலவரப்படி ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|