‘ஆடிட்டர்’ விதிமுறைகள் கடுமையாகின்றன ‘ஆடிட்டர்’ விதிமுறைகள் கடுமையாகின்றன ...   அன்னிய, ‘ஆன்லைன்’ நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி : மத்திய நேரடி வரிகள் வாரியம் அதிரடி அன்னிய, ‘ஆன்லைன்’ நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி : மத்திய நேரடி வரிகள் ... ...
ஆயத்த ஆடை ஏற்றுமதி 14.22 சதவீதம் வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2018
01:03

திருப்பூர்: நடப்பு நிதி­யாண்டு, முதல் காலாண்­டில், நாட்­டின் ஆயத்த ஆடை ஏற்­று­மதி வர்த்­த­கம், 14.22 சத­வீ­தம் சரி­வ­டைந்­துள்­ளது.
ஜி.எஸ்.டி.,யை அறி­மு­கப்­ப­டுத்­திய மத்­திய அரசு, ஆடை ஏற்­று­ம­திக்கு வழங்­கப்­பட்ட, டியூட்டி டிரா­பேக், ஸ்டேட் லெவிஸ் உட்­பட சலுகை விகி­தத்­தைக் குறைத்­தது.
இத­னால், ஜி.எஸ்.டி.,க்குப்­பின், 2017, அக்., முதல், நாட்­டின் ஆயத்த ஆடை ஏற்­று­மதி வர்த்­த­கம் சரி­வ­டை­யத் துவங்கி விட்­டது. 2016- –- 17 நிதி­யாண்­டில், ஒரு லட்­சத்து, 16 ஆயி­ரத்து, 508 கோடி ரூபா­யாக இருந்த ஆடை ஏற்­று­மதி, 2017 –- 18ல், ஒரு லட்­சத்து 7,678 கோடி­யாக சரிந்­தது.
பாதிப்பு விலகி, நடப்பு 2018-- – 19 நிதி­யாண்­டில், ஏற்­று­மதி வளர்ச்சி பெறும் என, எதிர்­பார்க்­கப்­
பட்­டது. மாறாக, இந்த நிதி­யாண்­டி­லும், ஆடை ஏற்­றுமதி சரிவை நோக்­கி­யே செல்­கிறது. 2017 –- 18 நிதி­யாண்­டின் முதல் காலாண்­டில் (ஏப்­ரல், மே, ஜூன் மாதங்­கள்), 31 ஆயி­ரத்து, 594 கோடி ரூபாய்க்கு ஆடை ஏற்­று­மதி வர்த்­த­கம் நடந்­தது.
நடப்பு நிதி­யாண்­டில், ஜூன் மாதத்­து­டன் நிறை­வ­டைந்த முதல் காலாண்­டில், ஏற்­று­மதி வர்த்­த­கம், 27 ஆயி­ரத்து, 102 கோடி ரூபா­யாக, 14.22 சத­வீ­தம் வீழ்ச்­சி­யைச் சந்­தித்­துள்­ளது.

திருப்­பூர் ஏற்­று­ம­தி­யா­ளர்சங்க பொதுச்செ­ய­லர் விஜ­ய­கு­மார் கூறி­ய­தா­வது: ஆடை ஏற்­று­மதி வர்த்­த­கத்­தில், நாளுக்கு நாள் போட்டி அதி­க­ரித்து வரு­கிறது. ஜி.எஸ்.டி.,க்குப்­பின், வழங்­கப்­பட்­டு­ வந்த, 13 சத­வீத சலு­கை­யில், 5.3 சத­வீ­தம் குறைக்­கப்­பட்­டுள்­ளது. நுால் விலை, ஜாப்
ஒர்க் கட்­ட­ணங்­கள் அதி­க­ரித்­துள்­ளன. இத­னால், வர்த்­த­கப் போட்­டி­களை எதிர்­கொண்டு, ‘ஆர்­டர்’களை பெறு­வ­தில், நம் நாட்டு ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்­குச் சிக்­கல் தொடர்­கிறது.
நாடு முழு­வ­தும், நேர­டி­யா­க­வும், மறை­மு­க­மா­க­வும், 35 லட்­சம் தொழி­லா­ளர்கள், ஆயத்த ஆடை துறை சார்ந்த, வேலை வாய்ப்பு பெறு­கின்­ற­னர்; வர்த்­தக வீழ்ச்­சி­யால், 10 சத­வீத தொழி­லா­ளர்­கள் வேலை இழந்­துள்­ள­னர்.ஏற்­று­மதி நிறு­வ­னங்­க­ளின் லாபம் குறைந்து, நஷ்­டத்தை நோக்­கியே எதிர்­கொள்­ளும் நிலை உரு­வா­கி­யுள்­ளது.மத்­திய அரசு, உட­ன­டி­யாக சிறப்­புச் சலு­கை­களை அறி­வித்து, ஆயத்த ஆடை ஏற்­று­மதி துறையை சரி­வில் இருந்து மீட்க வேண்­டும்.
இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஜூலை 15,2018
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)