ஆயத்த ஆடை ஏற்றுமதி 14.22 சதவீதம் வீழ்ச்சி ஆயத்த ஆடை ஏற்றுமதி 14.22 சதவீதம் வீழ்ச்சி ...  இ – மெயில் மூலம் மோசடி வலை இ – மெயில் மூலம் மோசடி வலை ...
அன்னிய, ‘ஆன்லைன்’ நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி : மத்திய நேரடி வரிகள் வாரியம் அதிரடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2018
01:05

புதுடில்லி: அன்­னிய, ‘ஆன்லைன்’ நிறு­வ­னங்­கள், இந்­தி­யா­வில் ஈட்­டும், குறிப்­பிட்ட வரம்­பிற்கு மேற்­பட்ட வரு­வாய் மற்­றும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு ஏற்ப, வரி விதிப்­பது குறித்து, கருத்து தெரி­விக்­கு­மாறு, மத்­திய நேரடி வரி­கள் வாரி­யம் கோரி­யுள்­ளது.

மத்­திய அரசு, புதிய நிதிச் சட்­டத்­தின் கீழ், இந்­தி­யா­வில், குறிப்­பி­டத்­தக்க பொரு­ளா­தார ஆதா­யம் பெறும் வெளி­நாட்­டி­ன­ருக்கு, வரு­மான வரி விதிக்­கும் சட்­டப் பிரிவை அறி­மு­கப்­ப­டுத்­தி­
உள்­ளது.பொரு­ளா­தார ஆதா­யம் என்­பது, இந்­தி­யா­வில் மேற்­கொள்­ளும், சரக்கு, சேவை அல்­லது சொத்து பரி­வர்த்­த­னை­கள் மற்­றும் 'டேட்டா' எனப்­படும் தர­வு­கள் அல்­லது சாப்ட்­வேர் பதி­வி­றக்­கம் ஆகி­ய­வற்றை குறிக்­கும். மேலும், 'டிஜிட்­டல்' தொழில்­நுட்­பத்­தில் நடை­பெ­றும் வர்த்­தக ஊக்­கு­விப்பு நட­வ­டிக்­கை­கள்; 'டுவிட்­டர், பேஸ்­புக்' போன்­ற­வற்­றில் உரை­யா­டும் பய­னா­ளி­கள் அடிப்­ப­டை­யில் பெறும் ஆதா­யம் ஆகி­ய­வை­யும் அடங்­கும்.

இது­கு­றித்து, மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது:வரு­மான வரிச் சட்­டம், 9ம் பிரி­வின் கீழ், மூன்று அம்­சங்­கள் தொடர்­பாக, கருத்து தெரி­விக்­கு­மாறு, மத்­திய நேரடி வரி­கள் வாரி­யம் கோரி­யுள்­ளது.l வெளி­நாட்­டி­னர், இந்­தி­யா­வில் மேற்­கொள்­ளும் சரக்கு அல்­லது சேவை சார்ந்த பரி­வர்த்­த­னை­க­ளின் வரு­வாய்க்கு, வரி வரம்பை நிர்­ண­யம் செய்­வது
l ‘டிஜிட்­டல்’ வாயி­லான சரக்­கு­கள், சேவை­கள், தர­வு­கள் அல்­லது சாப்ட்­வேர் பதி­வி­றக்­கம் ஆகி­ய­வற்­றின் பரி­வர்த்­த­னை­களில் கிடைக்­கும் வரு­வாய்க்கு வரி வரம்பை நிர்­ண­யிப்­பது
l ‘டிஜிட்­டல்’ தொழில்­நுட்­பத்­தில், வெளி­நாட்­டி­னர், இந்­தி­யா­வில் மேற்­கொள்­ளும்
வர்த்­தக ஊக்­கு­விப்பு செயல்­கள் அல்­லது உரை­யா­டல்­களில், பங்கு கொள்­வோர் எண்­ணிக்­கைக்கு ஏற்ப, வரி விதிப்பை அமல்­ப­டுத்­து­வது குறித்து கருத்து கேட்­கப்­ப­டு­கிறது.
இந்த அம்­சங்­கள் குறித்து, ஆகஸ்ட், 10 வரை, கருத்து தெரி­விக்­க­லாம். இவ்­வாறு அவர்
கூறி­னார். இந்த திட்­டம் நடை­மு­றைக்கு வந்­தால், ‘அமே­சான், கூகுள், நெட்­பி­ளிக்ஸ், பேஸ்­புக், டுவிட்­டர்’ போன்ற அன்­னிய ஆன்லைன் சேவை நிறு­வ­னங்­கள், வரு­வாய் மற்­றும் வாடிக்­கை­யா­ளர்­கள் அடிப்­ப­டை­யில், வரி செலுத்த நேரும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

வரி வருவாய் அதிகரிக்கும் : ‘வரி விதிப்­புக்கு முன், கருத்து கேட்­பது, வரு­மான வரித் துறை­யின் தோழ­மை­யான அணு­கு­மு­றையை காட்­டு­கிறது. வெளி­நாட்டு டிஜிட்­டல் நிறு­வ­னங்­கள், இந்­தி­யா­வில் அலு­வ­ல­கம், கடை என, எதி­லும் முத­லீடு செய்­யா­மல், வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் இருந்து பெரு­ம­ளவு வரு­வாய் ஈட்­டு­கின்­றன. ‘அத­னால், பய­னா­ளி­கள் அடிப்­ப­டை­யில் வரம்பு நிர்­ண­யித்து, வரி விதிக்­கும் முறை வர­வேற்­கத்­தக்­கது. இந்த வரி விதிப்­பால், உல­கின் எங்கோ ஒரு மூலை­யில் இருந்­து கொண்டு, டிஜிட்­டல் மூலம் புதிய வணி­கங்­களில் ஈடு­ப­டு­வோர், இந்­திய வரி விதிப்­பின் கீழ் கொண்டு வரப்­ப­டு­வர். வெளி­நாட்டு நிறு­வ­னங்­கள், இந்­தி­யா­வில், அவற்­றுக்­கான வாடிக்­கை­யா­ளர்­கள் அடிப்­ப­டை­யில் வரி செலுத்­தும் நிலை ஏற்­படும். இத­னால், வரி வரு­வாய் அதி­க­ரிக்­கும்’ என, நாங்­கியா அட்­வை­சர்ஸ் எல்.எல்.பி., நிர்­வாக பங்­கு­தா­ரர், ராகேஷ் நாங்­கியா கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
business news
புதுடில்லி : கடந்த ஆண்டில், கொரோனா காலத்தை விட, ஆண்களுக்கான ஆடம்பர பிராண்டு பொருட்கள் விற்பனை அதிகரித்து ... மேலும்
business news
மும்பை : ‘யூட்டிலிட்டி வெகிக்கிள்’ எனும், பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என, ‘பிட்ச் ... மேலும்
business news
புதுடில்லி : மூன்று ஆண்டுகளுக்கு பின், மீண்டும் வானில் பறக்க உள்ளன ‘ஜெட் ஏர்வேஸ்’ விமானங்கள். ஜெட் ஏர்வேஸ் ... மேலும்
business news
உலகலாவிய தொழில்நுட்ப பிராண்டான ஒன் பிளஸ், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் மிகவும் அணுகக்கூடிய 5ஜி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)