50 ஜவுளிகளுக்கு இறக்குமதி வரி உயர்வு50 ஜவுளிகளுக்கு இறக்குமதி வரி உயர்வு ... பொது துறை வங்கிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி; நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு வழங்குகிறது பொது துறை வங்கிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி; நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு ... ...
சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பங்கு வெளியீட்டில் சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2018
23:16

புதுடில்லி : இந்­தாண்டு, ஜன., – ஜூன் வரை, 88 சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள், புதிய பங்கு வெளி­யீ­டு­கள் மூலம், 1,546 கோடி ரூபாய் திரட்டி சாதனை படைத்­துள்­ளன. இது, கடந்த ஆண்டு, இதே காலத்­தில், 50 நிறு­வ­னங்­கள் திரட்­டிய, 660 கோடி ரூபாயை விட, இரு மடங்கு அதி­க­மா­கும். இதே காலத்­தில், பங்கு வெளி­யீட்டு தொகை­யும், சரா­ச­ரி­யாக, 13 கோடி­யில் இருந்து, 17.5 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.

மதிப்­பீட்டு காலத்­தில், 88 நிறு­வ­னங்­களில், நான்கு நிறு­வ­னங்­க­ளின் பங்­கு­களை ஒதுக்­கக் கோரி, 100 மடங்­கிற்­கும் அதி­க­மாக விண்­ணப்­பங்­கள் குவிந்­தன. மும்பை மற்­றும் தேசிய பங்­குச் சந்­தை­களில், சிறிய, நடுத்­தர நிறு­வனங்­கள் பிரி­வில், பங்கு வெளி­யீ­டு­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இதில் திரட்­டும் நிதியை, வர்த்­தக விரி­வாக்­கத்­திற்­கும், நடை­முறை தேவை­களை சமா­ளிக்­க­வும், இதர நிர்­வாக திட்­டங்­க­ளுக்­கும், நிறு­வ­னங்­கள் பயன்­படுத்திக் கொள்­கின்­றன.

இது குறித்து, ‘பான்­ட­மத் அட்­வை­சரி சர்­வீ­சஸ் குரூப்’ நிறு­வ­னத்­தின் குழு நிர்­வாக இயக்­கு­னர், மகா­விர் லுனா­வத் கூறி­ய­தா­வது: சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­கான பிரிவு துவங்கி, ஆறு ஆண்­டு­க­ளாக வளர்ச்சி கண்டு வரு­கிறது. இதற்கு, பங்கு வெளி­யீட்டு விலை கவர்ச்­சி­க­ர­மாக இருப்­ப­தும் ஒரு கார­ணம். பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் சேர்த்த பின், பெரும்­பா­லான பங்­கு­கள் விலை அதி­க­ரிக்­கிறது. இத­னால், பங்கு வெளி­யீட்­டிற்கு அதிக வர­வேற்பு காணப்­ப­டு­கிறது.

அதே­ச­ம­யம், இந்த ஆண்டு பங்­குச் சந்தை சரி­வின் போது ஏற்­பட்ட பாதிப்­பில், சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­களும் தப்­ப­வில்லை. ஒரு சில பங்­கு­கள் விலை குறைந்­து உள்­ளது. இருந்­த­போ­தி­லும், இப்­பி­ரி­வின் வளர்ச்சி நன்கு இருக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
business news
புதுடில்லி : கடந்த ஆண்டில், கொரோனா காலத்தை விட, ஆண்களுக்கான ஆடம்பர பிராண்டு பொருட்கள் விற்பனை அதிகரித்து ... மேலும்
business news
மும்பை : ‘யூட்டிலிட்டி வெகிக்கிள்’ எனும், பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என, ‘பிட்ச் ... மேலும்
business news
புதுடில்லி : மூன்று ஆண்டுகளுக்கு பின், மீண்டும் வானில் பறக்க உள்ளன ‘ஜெட் ஏர்வேஸ்’ விமானங்கள். ஜெட் ஏர்வேஸ் ... மேலும்
business news
உலகலாவிய தொழில்நுட்ப பிராண்டான ஒன் பிளஸ், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் மிகவும் அணுகக்கூடிய 5ஜி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)