புதிய ரூ.100 நோட்டு மாதிரி வெளியீடுபுதிய ரூ.100 நோட்டு மாதிரி வெளியீடு ... ‘டியூட்டி டிராபேக்’ கமிட்டியில் ஆடை ஏற்றுமதியாளர் முறையீடு ‘டியூட்டி டிராபேக்’ கமிட்டியில் ஆடை ஏற்றுமதியாளர் முறையீடு ...
முட்டை விலை 465 காசு­க­ளாக நிர்­ண­யம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2018
23:52

நாமக்­கல் : முட்டை விலை, ஐந்து காசு உயர்ந்து, 465 காசு­க­ளாக நிர்­ண­யம் செய்­யப்­பட்­டது.

நாமக்­கல்­லில், மண்­டல தேசிய முட்டை ஒருங்­கி­ணைப்­புக் குழு கூட்­டம் நடந்­தது. இதில், முட்­டை­யின் விலை, ஐந்து காசு உயர்த்­தப்­பட்டு, 465 காசு­க­ளாக நிர்­ண­யிக்­கப்­பட்­டது.முக்­கிய நக­ரங்­களில் முட்­டை­யின் விற்­பனை விலை (காசு­களில்): ஐத­ரா­பாத், 421; விஜ­ய­வாடா, 431; பர்­வாலா, 410; மும்பை, 477; மைசூரு, 452; பெங்­க­ளூரு, 445; கோல்­கட்டா, 490; டில்லி, 428; சென்னை, 470. அதே­போல், முட்­டைக்­கோழி உயி­ரு­டன், கிலோ, 83 ரூபாய்; கறிக்­கோழி, 82 ரூபாய் என, நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.

கல் நீல ரக மா விலை உயர்வு
கிருஷ்­ண­கிரி : கிருஷ்­ண­கிரி மாவட்­டத்­தில், 50 ஆயி­ரம் ஹெக்­டே­ரில், மா சாகு­படி செய்­யப்­ப­டு­கிறது. இதில், முன்­ப­ருவ ரக­மான, பங்­க­னப்­பள்ளி, மல்­கோவா, பீட்டர், காதர், காலப்­பாடு, ருமா­னியா ரக மாம்­ப­ழங்­க­ளுக்கு, இந்த ஆண்டு நல்ல விலை கிடைத்­தது.

ஆனால், மத்­திய தர மா, மாங்­கூழ் தொழிற்­சா­லை­யில் அதி­கம் பயன்­படும், பெங்­க­ளூரா மற்­றும் தோத்­தா­புரி ரகத்­துக்கு, இந்­தாண்டு, போதிய விலை கிடைக்­க­வில்லை.இந்­நி­லை­யில், கடந்த ஒரு வார­மாக அறு­வடை செய்­யப்­பட்ட, கல் நீலம் ரக மா, மார்க்­கெட்­டில், கிலோ, 30 முதல், 40 ரூபாய் வரை விற்­ப­னை­யா­னது. சீசன் முடிய, ஒரு சில நாட்­களே உள்ள நிலை­யில், கல் நீல ரகத்­துக்கு, நல்ல வர­வேற்பு மட்­டு­மன்றி, நல்ல விலை­யும் கிடைத்து வரு­கிறது.கடந்­தாண்டு, கல் நீல ரக மா, அதி­க­பட்­ச­மாக, கிலோ, 20 ரூபாய் வரை மட்­டுமே விற்­ப­னை­யா­னது குறிப்­பி­டத்­தக்­கது. காவே­ரி­பட்­ட­ணம் மற்­றும் கிருஷ்­ண­கிரி, ஜெக­தேவி, சந்­துார், போச்­சம்­பள்ளி ஆகிய மண்­டி­களில், தற்­போது கல் நீல ரக மா, வெளி­மா­வட்­டங்­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)