பதிவு செய்த நாள்
20 ஜூலை2018
10:56

மும்பை : லோக்சபாவில் மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற உள்ளதால், நேற்று சரிவுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவிலிருந்து மீண்டுள்ளன. சென்செக்ஸ் 150 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஜூலை 20, காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 158.11 புள்ளிகள் உயர்ந்து 36,509.34 புள்ளிகளாகவும், நிப்டி 43.45 புள்ளிகள் உயர்ந்து 11,000.55 புள்ளிகளாகவும் உள்ளன. ஐடி, ஆட்டோ, வங்கித்துறை உள்ளிட்ட துறைகளின் பங்குகள் 1.31 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், அதானி போர்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல், விப்ரோ, எஸ்பிஐ, டிசிஎஸ், ஹீரோ மோட்டோகார்ப், மாருதி சுசுகி, ஐடிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 2.30 சதவீதம் உயர்ந்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|