பதிவு செய்த நாள்
22 ஜூலை2018
23:18

மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் தங்கள் நிதியின் செயல்பாடு தொடர்பான அறிக்கையை, இ – மெயில் மூலம் பெறுவதற்கு பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் புதிய நெறிமுறை வழிவகை செய்துள்ளது.
மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பல்வேறு வகையான திட்டங்களை வழங்கி வருகின்றன. முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்ட் திட்ட செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருவது அவசியம். இதற்காக, நிறுவனங்கள் வழங்கும் போர்ட்போலியோ ஸ்டேட்மென்ட் எனப்படும் திட்ட செயல்பாடு தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையை கவனிப்பது அவசியம்.
இந்த அறிக்கையை பெற, முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்ட் நிறுவன இணையதளத்தை அணுக வேண்டும். தற்போது இந்த அறிக்கையை, முதலீட்டாளர்களுக்கு இ – மெயில் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என, செபி வலியுறுத்தியுள்ளது. முதலீட்டாளர்களின் பதிவு செய்யப்பட்ட இ – மெயில் முகவரிக்கு இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்படும்.
முதலீட்டாளர்கள் தனியே கேட்டுக்கொண்டால் அறிக்கையின் காகித வடிவமும் அனுப்பி வைக்கப்படும். மியூச்சுவல் பண்ட் திட்டத்தின் நோக்கம், முதலீட்டு கொள்கை, செலவு விகிதம், நிதியின் அளவு உள்ளிட்ட விபரங் களை இந்த அறிக்கை கொண்டு இருக்கும் என்பதால், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டின் செயல்பாடு பற்றி நன்றாக அறிந்து கொள்ள முடியும்.
மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் இணையதளத்தில், நிதிகளின், என்.ஏ.வி., எனப்படும் நிகர சொத்து மதிப்பையும், அதற்கான தலைப்பின் கீழ் வழங்க வேண்டும். மேலும் கோரிக்கையின் அடிப்படையில் இவற்றை, எஸ்.எம்.எஸ்., மூலமும் முதலீட்டாளர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|