நிறுவன சட்டத்தில் திருத்தம் செய்ய திட்டம் : 83 கிரிமினல் பிரிவுகளை மாற்ற பரிசீலனை நிறுவன சட்டத்தில் திருத்தம் செய்ய திட்டம் : 83 கிரிமினல் பிரிவுகளை மாற்ற ... ... ‘சென்செக்ஸ்’ புதிய உச்சம்: ஜி.எஸ்.டி., குறைப்பு எதிரொலி ‘சென்செக்ஸ்’ புதிய உச்சம்: ஜி.எஸ்.டி., குறைப்பு எதிரொலி ...
அன்னிய நேரடி முத­லீடு: சரிவு ஏன்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2018
23:35

சென்ற நிதி­யாண்­டில், இந்­தி­யா­வுக்கு வந்த அன்னிய நேரடி முத­லீ­டு­களின் அளவு, ஐந்து ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு மிக­வும் குறைவு. ஏன் இந்­த சரிவு? இந்­தி­யா­வில் முத­லீடு செய்­வ­தில் ஏன் சுணக்­கம்?

அன்னிய முத­லீ­டு­களை வர­வேற்­ப­தில், இந்­தியா தொடர்ந்து முன்­னிலை வகிக்­கிறது. முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தில் நாம் உலக அள­வில் முதல், 10 இடங்­க­ளுக்­குள் இருக்­கி­றோம். காப்­பீடு, பாது­காப்பு, சில்­லரை வணி­கம் உட்­பட, 15 துறை­களில் நாம் அன்னிய முத­லீ­டு­க­ளுக்கு அனு­மதி அளித்­துள்­ளோம்.ஒரு சில துறை­களில், 49 சத­வீ­தம் முதல், வேறு சில துறை­களில், 100 சதவீ­தம் வரை அன்னிய முத­லீடு அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளன.

இத­னால், உள்­நாட்டு தொழில் முயற்­சி­கள் பெரு­கும், வளர்ச்சி மேம்­படும், வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­கும் என்­பதே நம் எதிர்­பார்ப்பு. இதை­ய­டுத்து, ஒவ்­வொரு ஆண்­டும் எவ்­வ­ளவு கூடு­த­லாக அன்னிய முத­லீ­டு­களை ஈர்க்­கி­றோம் என்­பது கவ­ன­மாக பார்க்­கப்­ப­டு­கிறது. இதில் ஏதே­னும் சுணக்­கம் தென்­ப­டு­மா­னால், அது மிக­வும் கவ­லை­ய­ளிக்­கிறது. 2017 – ---18ம் ஆண்­டில், அப்­படி ஒரு நிலை ஏற்­பட்­டுள்­ளது.

அதற்கு முந்­தைய நிதி­யாண்­டு­டன் ஒப்­பி­டும் போது, இந்­தி­யா­வுக்­குள் வந்த அன்னிய முத­லீ­டு­களின் வளர்ச்சி, வெறும், 3 சத­வீ­தம் மட்­டுமே. அதா­வது மொத்­தம், 44.85 பில்­லி­யன் டாலர்­களே வந்­துள்ளன. இதற்கு முந்­தைய ஆண்­டு­ களில் பார்த்­தால், இந்­தி­யா­வுக்கு வந்த முத­லீ­டு­கள் ஒவ்­வொரு ஆண்­டும் நல்ல வளர்ச்­சி­யைக் கண்­டுள்­ளது. அதா­வது, 8.67 சத­வீ­தம், 29 சத­வீ­தம், 27 சத­வீ­தம் என தொடர்ச்­சி­யான வளர்ச்சி. 2013- – 14ல், 8 சத­வீத வளர்ச்சி ஏற்­பட்­டது. அத­னோடு ஒப்­பி­டும்­போது, கடந்த ஆண்டு, வெறும், 3 சத­வீத வளர்ச்சி தான் எனும்­போது லேசாக அதிர்ச்சி ஏற்­ப­டவே செய்­கிறது.

என்­னென்ன துறை­கள்?
சென்ற ஆண்டு வந்த முத­லீ­டு­களும், விரி­வாக எல்லா துறை­க­ளுக்­கும் வந்­தது போல் தெரி­ய­வில்லை. சேவை துறை, கணினி மென்­பொ­ருள், வன்­பொ­ருள் துறை, தொலை­தொ­டர்பு துறை, வர்த்­த­கம், கட்­டு­மா­னம், ஆட்­டோ­மொ­பைல், மின்­சா­ரம் ஆகிய துறைக­ளுக்கே அதிக முத­லீ­டு­கள் வந்­துள்ளன. இவை­யும், மொரீ­ஷி­யஸ், சிங்­கப்­பூர், நெதர்­லாந்து, அமெ­ரிக்கா, ஜப்­பான் ஆகிய நாடு­களில் இருந்தே வந்­துள்ளன.

இதில் மொரீ­ஷி­யஸ் என்­பது பின்­வா­சல் வழி. அங்­கே­யி­ருந்து வந்த முத­லீ­டு­கள், உண்­மை­யில் அன்னிய முத­லீ­டு­ கள் தானா என்ற சந்­தே­கம் உண்டு. அவை, இந்­தி­யர்­களின் பண­மா­க­வும் இருக்­க­லாம் என்­பது சந்­தே­கத்­துக்கு இட­மா­னது. மொரீ­ஷி­யசை விட்­டு­விட்­டுப் பார்த்­தால், மற்ற நாடு­கள், இந்­தி­யா­வில் முத­லீடு செய்ய போது­மான ஆர்­வம் காட்­ட­ வில்­லையோ என்ற எண்­ணமே மேலெ­ழு­கிறது.

அன்னிய நேரடி முத­லீ­டு­க­ளைப் பெறு­வ­தில் சென்ற ஆண்­டும் முதல் இடத்­தில் இருந்­தது மஹா­ராஷ்­டிரா தான். இத்­த­னைக்­கும், முந்­தைய ஆண்­டு­டன் ஒப்­பி­டும்­போது கடந்த ஆண்டு, மஹா­ராஷ்­டிரா பெற்­றுள்ள முத­லீ­டு­கள், 32 சத­வீ­தம் குறைவு.

ஆந்­தி­ரா­வுக்கு வந்த முத­லீடு, 43 சத­வீ­தம் சரிந்­தி­ருக்க, குஜ­ராத்­துக்கு வந்­ததோ, 38 சத­வீ­தம் குறைவு. ஆனால், எப்­போ­தும் இல்­லாத அதி­ச­ய­மாக, கர்­நா­ட­கத்­துக்கு வந்த முத­லீடு மட்­டும், 300 சத­வீ­தம் பெரு­கி­யுள்­ளது. 2016 – -17ல், 2.1 பில்­லி­யன் டால­ராக இருந்த முத­லீடு, 2017- – 18ல், 8.6 பில்­லி­யன் டாலர் அள­வுக்கு உயர்ந்­துள்­ளது, அனை­வ­ரை­யும் வியப்­பில் ஆழ்த்­தி­யுள்­ளது.

கார­ணம் என்ன?
இந்­தி­யா­வில் எதிர்­பார்த்த அள­வுக்கு வளர்ச்சி இல்லை; வரு­வாய் ஈட்ட முடி­ய­வில்லை. உள்­கட்­டு­மா­னப் பிரச்­னை­களும், அரசு சார் சட்ட நெறி­மு­றைப் பிரச்­னை­களும் இந்­தச் சுணக்­கம் ஏற்­பட ஒரு கார­ண­மாக இருக்­க­லாம் என்­பது நிபு­ணர்­கள் கருத்து. ஆனால், எந்த அன்னிய முத­லீட்டு நிறு­வ­ன­மும் வெளிப்­ப­டை­யாக இதைத் தெரி­விக்­க­வில்லை. இதை­விட முக்­கி­ய­மாக, சர்­வ­தேச கார­ணங்­கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்றன. அமெ­ரிக்­கா­வில் வட்டி விகி­தங்­கள் உயர்ந்து வரு­கின்றன. அங்கே வளர்ச்சி படிப்­ப­டி­யாக மேம்­பட்­டுள்­ளது முக்­கிய கார­ணம். இதே­போல், பல வளர்ந்த நாடு­கள் தரக்­கூ­டிய முன்­னேற்­ற­மும் கவர்ச்­சி­க­ர­மாக இருக்­கின்றன.

மேலும், இந்­தி­யா­வில் உள்ள இரண்டு பிரச்­னை­கள், அன்னிய முத­லீட்­டா­ளர்­களை கவ­லை­கொள்ள வைத்­துள்ளன. கச்சா எண்­ணெய் விலை­யேற்­ற­மும், அத­னால் ஏற்­பட்­டுள்ள நடப்பு கணக்­குப் பற்­றாக்­கு­றை­யும், தொடர்ச்­சி­யாக பல பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்தி வரு­கின்றன. அதில் முக்­கி­ய­மா­னது, ரூபா­யின் மதிப்பு ஏற்ற, இறக்­கங்­கள். இவை­யெல்­லாம் ஒரு­வி­த­மான சமச்­சீ­ரற்ற தன்­மையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தால், லாபம் ஈட்ட நினைக்­கும் நிறு­வ­னங்­கள், தங்­கள் முத­லீ­டு­க­ளைத் தள்­ளிப் போடு­கின்றன.

நம் கவ­னத்­தைக் கவ­ரும் இன்­னொரு விஷ­யம், அன்னிய முத­லீட்­டா­ளர்­கள் திரும்ப எடுத்­துக்­கொண்டு போகும் மூல­த­னம். ஐந்து ஆண்­டு­களில், திரும்ப எடுத்­துக்­கொண்டு போகும் தொகை­யும் அதி­க­மா­கி­யுள்­ளது. அதா­வது, முத­லீடு செய்து, போதிய லாபம் ஈட்டி, பின்­னர் திரும்ப எடுத்­துக்­கொண்டு போகின்­ற­னரா அல்­லது மூல­த­னம் வள­ரா­மலே, வேறு வாய்ப்­பு­க­ளைத் தேடிப் போகின்­ற­னரா என்­பது ஆய்­வுக்­கு­ரி­யது.

பாடம் என்ன?
அரசு வெளி­யிட்ட தக­வல்­களில் இருந்தே இத்­த­கைய விப­ரங்­களை நாம் பெறு­கி­றோம். நிச்­ச­யம் இதன் பாதிப்­பு­கள் அர­சுக்­கும் தெரிந்­தி­ருக்­கும். ஒரு­பக்­கம், அரசு தன் முத­லீ­டு­க­ளைப் பெருக்­கிக் கொண்­டி­ருக்­கும் போது, அதற்­குத் துணை செய்­யும் வித­மாக அன்னிய முத­லீ­டு­களும் தேவை.அதற்­கேற்ப தன் கொள்கை முடி­வு­க­ளை­யும் முத­லீட்­டா­ளர்­கள் கோரும் எளி­மைப்­ப­டுத்­தல்­க­ளை­யும் செய்து தர­வேண்­டி­யது, இந்­திய அர­சின் கடமை. பழைய துறை­க­ளி­லேயே மீண்­டும் முத­லீ­டு­கள் வந்து கொட்­டும் என எதிர்­பார்ப்­ப­தற்­கில்லை.

புதிய துறை­களில், புதிய வாய்ப்­பு­களை உரு­வாக்­கித் தரும்­போது தான், முத­லீட்­டுக்­கான வாசல் திறக்­கும். உதா­ர­ண­மாக, இந்­தி­யா­வில் இன்று பெரும் வேகத்­தோடு வள­ரு­வது, ‘இ – -காமர்ஸ்’ துறை­யும், சுற்­று­லாத் துறை­யும் தான். இவற்­றில் பெரிய நிறு­வ­னங்­கள் முத­லீ­டு­க­ளைச் செய்ய காத்­தி­ருக்­கின்றன. அதை, இந்­தியா பயன்­ப­ுத்­திக் ­கொள்ள வேண்­டும்.

இன்­னொரு புறம், உள்­நாட்டு முத­லீட்­டா­ளர்­க­ளை­யும் ஊக்­கப்­ப­டுத்தி, பல தொழில்­களில் ஈடு­ப­டுத்­து­வது அர­சின் கடமை தான். அரசு, தனி­யார் முத­லீ­டு­கள், அன்னிய முத­லீ­டு­கள் என்று அத்­தனை தரப்­பும் முனைந்து செயல்­பட்­டால் தான் வளர்ச்சி வேகம் பிடிக்­கும், வேலை­வாய்ப்­பு­கள் பல்­கிப் பெரு­கும். அன்னிய முத­லீட்டு சரிவு என்­பது நமக்கு விடுக்­கப்­பட்ட எச்­ச­ரிக்கை. அதை உணர்ந்து சீர்­ப­டுத்­தத் துவங்­கு­வது அர­சின் கடமை.

-ஆர்.வெங்­க­டேஷ்,பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)