‘சென்செக்ஸ்’ புதிய உச்சம்: ஜி.எஸ்.டி., குறைப்பு எதிரொலி‘சென்செக்ஸ்’ புதிய உச்சம்: ஜி.எஸ்.டி., குறைப்பு எதிரொலி ... பெங்களூரில், ‘ஐ போன்’ மாதிரிகள்; உற்பத்தியை துவக்கியது ஆப்பிள் பெங்களூரில், ‘ஐ போன்’ மாதிரிகள்; உற்பத்தியை துவக்கியது ஆப்பிள் ...
எஸ்.எம்.இ., நிறுவனங்கள் வகைப்படுத்தும் மசோதா; பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2018
23:55

புதுடில்லி : குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­களை, அவற்­றின் விற்­று­மு­தல் அடிப்­ப­டை­யில் வகைப்­ப­டுத்­தும் மசோதா, பார்லி.,யில் நேற்று தாக்­கல் செய்­யப்­பட்­டது.

குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் துறை இணை அமைச்­சர் கிரி­ராஜ் சிங், லோக்­ச­பா­வில், மசோ­தாவை தாக்­கல் செய்­தார்.

ஆர்வமில்லை :
தற்­போது, சரக்கு தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள், அவற்­றின் ஆலை மற்­றும் இயந்­தி­ரங்­களில் செய்த முத­லீட்­டின் அடிப்­ப­டை­யில், குறு, சிறு, நடுத்­தரநிறு­வ­னங்­கள் என, பிரிக்­கப்­ப­டு­கின்­றன. இத­னால், பல நிறு­வ­னங்­கள் புதிய முத­லீ­டு­க­ளை­யும், விரி­வாக்­கத் திட்­டங்­க­ளை­யும் மேற்­கொள்ள அதி­கம் ஆர்­வம் காட்­டா­மல் உள்­ளது, ஆய்­வொன்­றில் தெரி­ய­வந்­தது.

இதற்கு, முத­லீ­டு­கள் உய­ரும் போது, குறு நிறு­வ­னங்­கள், சிறு நிறு­வ­னங்­கள் அல்­லது நடுத்­தர நிறு­வ­னங்­கள் பிரி­வு­க­ளுக்கு மாற நேரும்; தற்­போது கிடைத்து வரும் ஊக்­கச் சலு­கை­கள் குறை­யும் என்ற அச்­சம் தான் கார­ணம். இத்­த­கைய எதிர்­மறை சிந்­த­னையை அகற்றி, நிறு­வ­னங்­கள் வளர்ச்­சியை நோக்­க­மாக வைத்து செயல்­பட வேண்­டும் என்­ப­தற்­காக, மசோதா, தாக்­கல் செய்­யப்­பட்­டு உள்­ளது.

விற்றுமுதல் :
இதன்­படி, இனி, ஆண்­டுக்கு, 5 கோடி ரூபாய் வரை விற்­று­மு­தல் உள்ள நிறு­வ­னங்­கள், குறு­நி­று­வ­னங்­க­ளாக கரு­தப்­படும். அது­போல, 5 கோடி ரூபாய்க்கு மேல், 75 கோடி ரூபாய் வரை, விற்­று­மு­தல் உள்ள நிறு­வ­னங்­கள், சிறிய நிறு­வ­னங்­கள் என்ற பிரி­வில் சேர்க்­கப்­படும். நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு, ஆண்டு விற்­று­மு­தல், 75 – 250 கோடி ரூபா­யாக நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.

மசோ­தா­வுக்கு, பார்லி., ஒப்­பு­தல் அளித்­த­தும், புதிய நடை­முறை அம­லுக்கு வரும். இந்த மாற்­றம் மூலம், நிறு­வ­னங்­கள், வங்கி கடன் பெறு­வது, தொழில் புரி­வது மேலும் சுல­ப­மா­கும். ஜி.எஸ்.டி., விப­ரங்­க­ளின் அடிப்­ப­டை­யில், நிறு­வ­னங்­களை எளி­தாக வகைப்­ப­டுத்த முடி­யும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)