மகளிர் குழுவினர் தயாரிப்புகள் விற்பனையில் இறங்கும் அமேசான் மகளிர் குழுவினர் தயாரிப்புகள் விற்பனையில் இறங்கும் அமேசான் ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 68.69 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 68.69 ...
5 பொது துறை வங்கிகளின் கடன் தகுதி உயரும்; ‘மூடிஸ்’ நிறுவனம் அறிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2018
23:21

மும்பை : ‘மத்­திய அரசு அளிக்­கும், 11,336 கோடி ரூபாய் பங்கு மூல­த­னம் மூலம், பொதுத் துறை­யைச் சேர்ந்த, ஐந்து வங்­கி­களின் கடன் தகுதி உய­ரும்’ என, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘மூடிஸ்’ தெரி­வித்­து உள்­ளது.

கடந்த, 2017 -– 18ம் நிதி­யாண்­டில், பொதுத் துறை வங்­கி­கள், வாராக் கட­னுக்கு அதிக நிதி ஒதுக்­கி­ய­தால், இழப்பை சந்­தித்­துள்ளன. இத­னால், சில வங்­கி­க­ளுக்கு, அவற்­றின் வரு­வா­யில் இருந்து, கடன் பத்­தி­ரங்­க­ளுக்கு வட்டி வழங்­கும் நிலை ஏற்­பட்­டு உள்­ளது.

‘பேசல் 3’ விதிமுறை :
இதன் கார­ண­மாக, அவ்­வங்­கி­களின் மூல­தன இருப்பு விகி­தம், ‘பேசல் 3’ விதி­மு­றைப்­படி இருக்க வேண்­டிய, குறைந்­த­பட்ச அள­வான, 5.5 சத­வீ­தத்தை விட, குறை­யும் சூழல் உரு­வா­கி­யுள்­ளது. இதை­ய­டுத்து, மத்­திய அரசு, மறு பங்கு மூல­தன திட்­டத்­தின் கீழ், பொதுத் துறை­யைச் சேர்ந்த, பஞ்­சாப் நேஷ­னல் வங்கி உள்­ளிட்ட, ஐந்து வங்­கி­க­ளுக்கு, 11,336 கோடி ரூபாய் வழங்­கப்­படும் என, கடந்த வாரம் அறி­வித்­தது.

இது குறித்து மூடிஸ் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: மத்­திய அர­சின் நிதி­யு­த­வி­யால், பஞ்­சாப் நேஷ­னல் வங்கி, அல­கா­பாத் வங்கி, ஆந்­திரா வங்கி, இந்­தி­யன் ஓவர்­சீஸ் வங்கி, கார்ப்­ப­ரே­ஷன் வங்கி ஆகி­ய­வற்­றின் கடன் தகுதி உய­ரும். அவற்­றின், பங்கு மூல­தன விகி­த­மும் வலுப்­பெ­றும். கடந்த நிதி­யாண்டு நில­வ­ரப்­படி, பொதுத் துறை­யில், இந்த ஐந்து வங்­கி­களின் மூல­தன ஆதாய விகி­தம் தான், மிக­வும் பல­வீ­ன­மாக இருந்­தது.

ஒரு கட்­டத்­தில், ‘பேசல் 3’ விதி­மு­றைப்­படி பரா­ம­ரிக்க வேண்­டிய, குறைந்­த­பட்ச மூல­தன இருப்பு விகி­தம், 5.5 சத­வீ­தத்தை விட குறை­யும் அபா­யம் இருந்­தது.

இழப்பு தொடரும் :
இது, மத்­திய அரசு பங்கு மூல­த­னம் மேற்­கொண்ட பின் அதி­க­ரிக்­கும் என்­ப­தால், வங்­கி­கள் அத்­த­கைய இடர்ப்­பாட்­டில் இருந்து விடு­பட்­டு உள்ளன. மேலும், பஞ்­சாப் நேஷ­னல் வங்கி, ஆந்­திரா வங்கி ஆகி­ய­வற்­றின், கால­வ­ரம்­பற்ற கடன் பத்­தி­ரங்­க­ளுக்கு ஏற்­ப­ட­வி­ருந்த மதிப்­பி­ழப்­பும், இத­னால் தவிர்க்­கப்­பட்­டுள்­ளது. இத்­த­கைய கடன் பத்­தி­ரங்­களின் மதிப்பு, கடந்த நிதி­யாண்­டில், பஞ்­சாப் நேஷ­னல் வங்கி மற்­றும் ஆந்­திரா வங்­கி­யில், முறையே, 5,300 கோடி மற்­றும் 2,200 கோடி ரூபா­யாக இருந்­தது.

வாராக் கட­னுக்­கான ஒதுக்­கீடு, கடன் செல­வி­னங்­கள் உயர்வு போன்­ற­வற்­றால், ஐந்து வங்­கி­கள், நடப்பு நிதி­யாண்­டி­லும் இழப்பை சந்­திக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. ஆனால், அது, கடந்த நிதி­யாண்டை விட, குறை­வா­கவே இருக்­கும். எனி­னும், அது, 2019, மார்ச் வரை, இந்த வங்­கி­கள் செயல்­படும் விதத்தை பொறுத்தே உள்­ளது. இவ்­வங்­கி­க­ளுக்கு, மத்­திய அர­சின் பங்கு மூல­த­னம் மேலும் தேவைப்­ப­ட­லாம். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

மறு பங்கு மூலதனம் :
மத்­திய அர­சின், மறு பங்கு மூல­தன திட்­டத்­தின் கீழ், பஞ்­சாப் நேஷ­னல் வங்­கிக்கு, 2,816 கோடி ரூபாய் நிதி­யு­தவி கிடைக்­கும் அடுத்து, கார்ப்­ப­ரே­ஷன் வங்கி, 2,555 கோடி; இந்­தி­யன் ஓவர்­சீஸ் வங்கி, 2,157 கோடி; ஆந்­திரா வங்கி, 2,019 கோடி மற்­றும் அல­கா­பாத் வங்கி, 1,790 கோடி ரூபாய் பெற உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)