தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு ... லாரிகள், ‘ஸ்டிரை’க்கால் வெல்லம் ஏலம் ரத்து   லாரிகள், ‘ஸ்டிரை’க்கால் வெல்லம் ஏலம் ரத்து ...
சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2018
23:16

கேரட் வரத்து குறைவு; கிலோ ரூ.60 ஆக உயர்வு
ஊட்டி : ஊட்­டிக்கு கேரட் வரத்து குறைந்து வரு­வ­தால், விலை­யும் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கிறது.

நீல­கிரி மாவட்­டம், ஊட்­டி­யில் விளை­யும் கேரட்­டுக்கு, மேட்­டுப்­பா­ளை­யம், சென்னை, பெங்­க­ளூரு உள்­ளிட்ட பகு­தி­களில் மவுசு அதி­கம். மாவட்­டத்­தின் பல்­வேறு பகு­தி­க­ளி­லி­ருந்து நாள்­தோ­றும், ஊட்டி மார்க்­கெட்­டுக்கு, 5 டன் அள­வுக்கு கேரட் விற்­ப­னைக்கு கொண்டு வரப்­ப­டு­கிறது. கடந்த ஒரு வார­மாக தொட­ரும் லாரி, ‘ஸ்டி­ரைக்’கால், தின­மும், 1 டன் அள­வுக்கே கேரட் விற்­ப­னைக்கு கொண்டு வரப்­ப­டு­கிறது.

லாரி ஸ்டி­ரைக்­கால், அறு­வ­டைக்கு தயா­ரான கேரட்டை சந்­தைக்கு அனுப்­பு­வ­தில், விவ­சா­யி­கள் தயக்­கம் காட்டி வரு­கின்­ற­னர். கடந்த இரண்டு நாட்­க­ளாக, ஊட்டி மார்க்­கெட் காய்­கறி ஏலத்­தில், 1 கிலோ கேரட், 30 முதல், 35 ரூபாய் வரை விற்­கப்­ப­டு­கிறது. வெளி மார்க்­கெட்­டில் கிலோ­வுக்கு அதி­க­பட்­சம், 60 ரூபாய் வரை விற்­கப்­ப­டு­கிறது.

ஊட்டி சுற்­று­வட்­டார பகு­தி­க­ளான, கேத்தி பாலாடா, எம்.பாலாடா, கோத்­த­கிரி, குன்­னுார் உள்­ளிட்ட பகு­தி­களில் உள்ள விவ­சா­யி­கள், அரசு பஸ்­க­ளுக்கு அதற்­குண்­டான வாட­கையை முன்­ன­தாக செலுத்தி மேட்­டுப்­பா­ளை­யம், சென்னை, மதுரை உள்­ளிட்ட தமி­ழ­கத்­தின் பல்­வேறு இடங்­க­ளுக்கு, கேரட் மூட்­டை­களை எடுத்­துச் செல்­கின்­ற­னர்.

ஊட்டி நக­ராட்சி மார்க்­கெட், காய்­கறி மொத்த வியா­பாரி சங்க நிர்­வாகி, ராஜா முக­மது கூறு­கை­யில், ‘‘லாரி ஸ்டி­ரைக்­கால் ஊட்டி மார்க்­கெட்­டுக்கு தற்­போது, 1 டன் அள­வுக்கு கேரட் விற்­ப­னைக்கு வரு­கிறது. 35 கிலோ கேரட் அடங்­கிய, 1 மூட்டை, 1,000 ரூபாய்க்கு விற்­கப்­ப­டு­கிறது. வரத்து குறைந்­த­தால் விலை அதி­க­ரித்­துள்­ளது. லாரி ஸ்டி­ரைக் பிரச்­னைக்கு தீர்வு கிடைத்­தால், மலை காய்­க­றிக­ளின் விலை சற்று குறை­யும்,’’ என்­றார்.


தேங்காய் விலை சரிவு; விவசாயிகள் கவலை

திண்டுக்கல் : திண்­டுக்­கல்­லில் வரத்து குறை­வாக இருந்­தும் தேங்­காய், கொப்­பரை விலை சரி­வ­டைந்­துள்­ள­தால், விவ­சா­யி­கள் கவ­லை­யில் உள்­ள­னர்.


திண்­டுக்­கல் மாவட்ட பகு­தி­க­ளி­லி­ருந்து தேங்­காய் மற்­றும் கொப்­பரை தேங்­காய், குஜ­ராத், ராஜஸ்­தான், மத்­திய பிர­தே­சம் போன்ற வெளிமா­நி­லங்­க­ளுக்­கும் அனுப்­பப்­ப­டு­கிறது. சென்ற ஆண்டு போது­மான மழை­யில்­லா­த­தால், இந்­தாண்டு தேங்­காய் உற்­பத்தி பாதித்­துள்­ளது.


வரத்து குறை­வாக இருந்­தும் தேங்­காய் விலை சரி­வ­டைந்­துள்­ளது. இத­னால், சிறிய தேங்­காய் நேற்று, எட்டு ரூபாய்க்­கும்; பெரிய தேங்­காய், 15 ரூபாய்க்­கும்; 1 கிலோ தேங்­காய், 35 ரூபாய்க்­கும்; கொப்­பரை கிலோ­வுக்கு, 25 குறைந்து, 105 ரூபாய்க்­கும் விற்­றன.


தேங்­காய் வியா­பாரி சுதா­க­ரன் கூறு­கை­யில், ‘‘தற்­போது வட மாநி­லங்­களில் திரு­விழா காலம். லாரி ஸ்டி­ரைக்­கால், 1,000 டன் தேங்­காய் அனுப்ப முடி­யா­மல் தேக்கி வைக்­கப்­பட்­டுள்­ளது. வரத்து குறை­வாக இருந்­தும் தேங்­காய், கொப்­பரை விலை குறைந்­துள்­ளது. லாரி ஸ்டி­ரைக் முடி­வுக்­காக காத்­தி­ருக்­கி­றோம்,’’ என்­றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)