பதிவு செய்த நாள்
26 ஜூலை2018
23:18

புதுடில்லி : ‘ரெப்ரிஜிரேட்டர், வாஷிங் மிஷின்’ உள்ளிட்ட நுகர்வோர் சாதனங்கள் இறக்குமதிக்கு, சுங்க வரியை உயர்த்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
ரெப்ரிஜிரேட்டர், வாஷிங் மிஷின், சிறிய, ‘டிவி’ உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு, ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பு, இன்று அமலுக்கு வருகிறது. இதனால், நுகர்வோர் சாதனங்கள் இறக்குமதிக்காக, சுங்க வரி அடிப்படையில், நிறுவனங்கள் செலுத்தும், ஐ.ஜி.எஸ்.டி., வரியும் குறையும்.
அவ்வாறு குறையும் பட்சத்தில், உள்நாட்டு நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், கடுமையான போட்டியால் பாதிக்கப்படும். எனவே, ‘ரெப்ரிஜிரேட்டர், வாஷிங் மிஷின் உள்ளிட்ட நுகர்வோர் சாதனங்களின் இறக்குமதிக்கு, சுங்க வரியை உயர்த்த வேண்டும்’ என, மத்திய அரசுக்கு, தொழில் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையடுத்து, ‘‘உள்நாட்டு தொழில் துறையை பாதுகாக்க, நுகர்வோர் சாதனங்களுக்கான சுங்க வரியை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும்,’’ என, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய தலைவர், ரமேஷ் தெரிவித்து உள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|