பதிவு செய்த நாள்
26 ஜூலை2018
23:20

புதுடில்லி : தொலைதொடர்பு சேவையை வழங்கும், வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் இணைப்பிற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த ஓராண்டு காலமாகவே, இணைப்பு நடவடிக்கை தொடர்பான பணிகளை, இந்நிறுவனங்கள் மேற்கொண்டு வந்தன. இந்நிலையில், கடந்த, 9ம் தேதி, இணைப்பு நடவடிக்கைக்கு, தொலைதொடர்பு துறை ஒப்புதல் அளித்தது. இரு நிறுவனங்களும், தொலைதொடர்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் மற்றும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் தீர்ப்பிற்கு கட்டுப்பட வேண்டும் என்ற நிபந்தனையின்படி, இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதையடுத்து, இவ்வாரத் துவக்கத்தில், இரு நிறுவனங்களும் இணைந்து, தொலைதொடர்பு துறைக்கு, காப்புத் தொகையாக, 7,269 கோடி ரூபாய் செலுத்தின. இதை தொடர்ந்து, இரு நிறுவனங்களின் இணைப்பு நடவடிக்கைக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், இந்திய தொலைதொடர்பு சேவையில், வோடபோன் – ஐடியா செல்லுலார் கூட்டு நிறுவனம், 43 கோடி சந்தாதாரர்களுடன், முதலிடத்திற்கு முன்னேறும். ஏர்டெல் நிறுவனம், இரண்டாவது இடத்திற்கு தள்ளப்படும். ஆர்ஜியோ, மூன்றாவது இடத்தில் இருக்கும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|