‘கூரியர்’ ஏற்றுமதி வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு‘கூரியர்’ ஏற்றுமதி வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு ... உணர்ந்து நடக்க வேண்­டிய நேர­மிது உணர்ந்து நடக்க வேண்­டிய நேர­மிது ...
விப்ரோவை பின்னுக்கு தள்ளிய எச்.சி.எல்.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2018
05:27

நொய்டா: தக­வல் தொழில்­நுட்­பத் துறை­யைச் சேர்ந்த, எச்.சி.எல்., டெக்­னா­ல­ஜிஸ் நிறு­வ­னத்­தின் நிகர லாபம், நடப்பு, 2018- – 19ம் நிதி­யாண்­டின், ஏப்., – ஜூன் காலாண்­டில், 9 சத­வீ­தம் அதி­க­ரித்து, 2,431 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.இதே காலத்­தில், டாலர் அடிப்­ப­டை­யி­லான வரு­வாய், 205 கோடி டால­ராக அதி­க­ரித்­துள்­ளது.இதன் மூலம், இந்­திய தக­வல் தொழில்­நுட்ப துறை­யில், எச்.சி.எல்., நிறு­வ­னம், விப்­ரோவை விஞ்சி, மூன்­றா­வது இடத்­திற்கு முன்­னே­றி­ உள்­ளது.விப்ரோ நிறு­வ­னம், நடப்பு நிதி­யாண்­டின், ஏப்., – ஜூன் வரை­யி­லான காலாண்­டில், 202 கோடி டாலர் ஈட்­டி­யி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.இந்­திய தக­வல் தொழில்­நுட்ப துறை­யில், டாடா கன்­சல்­டன்சி நிறு­வ­னம், தொடர்ந்து முத­லி­டத்­தில் உள்­ளது. இந்­நி­று­வ­னம், மதிப்­பீட்டு காலாண்­டில், 505 கோடி டாலர் வரு­வாய் ஈட்­டி­யுள்­ளது.
சாதனை : இன்­போ­சிஸ் நிறு­வ­னம், 283 கோடி டாலர் வரு­வா­யு­டன், இரண்­டா­வது இடத்­தில் உள்­ளது.எச்.சி.எல்., டெக்­னா­ல­ஜிஸ் நிறு­வ­னத்­தின், தலைமை செயல் அதி­காரி, சி.விஜ­ய­கு­மார் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:நடப்பு நிதி­யாண்­டில், எஞ்­சிய ஒன்­பது மாதங்­களில், நிறு­வ­னத்­தின் வரு­வாய் வளர்ச்சி, டாலர் அடிப்­ப­டை­யில், 8.4 – 10.4 சத­வீ­த­மாக இருக்­கும்.நிறு­வ­னத்­தின் முதல் நிலை வர்த்­த­கத்­தில், தொலை­தொ­டர்பு, நிதிச் சேவை, எரி­சக்தி ஆகிய துறை­கள் இடம் பெற்­றுள்­ளன. இத்­து­றை­கள் சார்ந்த வர்த்­த­கம், மந்­த­நி­லை­யில் இருந்து மீண்­ட­தால், மதிப்­பீட்டு காலாண்­டில், வரு­வாய் அதி­க­ரித்­துள்­ளது. சாதனை அள­வாக, 27 ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தா­கி­யுள்­ளன. மேலும், ‘கிள­வுட், டிஜிட்­டல், அன­லிட்டி’ தொழில்­நுட்­பங்­களை உள்­ள­டக்­கிய, நிறு­வ­னத்­தின், இரண்­டாம் நிலை வர்த்­த­க­மும், நன்கு இருந்­தது.நிறு­வ­னத்­தின் மூன்­றாம் நிலை வர்த்­த­கம் வாயி­லான வரு­வாய், எச்.சி.எல்., சாப்ட்­வேர்­கள், காப்­பு­ரிமை பயன்­பாட்­டிற்­கான, ‘ராயல்டி’ ஆகி­ய­வற்­றின் மூலம் கிடைக்­கிறது.இப்­பி­ரி­வும், சிறப்­பாக செயல்­பட்டு, நிறு­வ­னத்­தின் வரு­வாய் உயர வழி­கோ­லி­யது.எதிர்­கா­லத்­தில், நிறு­வ­னத்­தின் வளர்ச்­சிக்கு, இரண்டு மற்­றும் மூன்­றாம் நிலை வர்த்­த­கங்­கள் தான் துணை புரி­யும் என்ற திட­மான நம்­பிக்கை உள்­ளது. அப்­பி­ரி­வு­கள் தான் சந்­தை­யில் கோலோச்­சும் என்­ப­தால், அவற்­றில் தொடர்ந்து முத­லீடு செய்­யப்­படும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.
39 நாடுகளில்...: தமி­ழ­கத்­தைச் சேர்ந்த, சிவ­நா­டார், எச்.சி.எல்., என்ற, ஹிந்துஸ்­தான் கம்ப்­யூட்­டர்ஸ் நிறு­வ­னத்தை, 1976ல் உரு­வாக்­கி­னார். இந்­நி­று­வ­னம், 1991ல், எச்.சி.எல்., டெக்­னா­ல­ஜிஸ் என்ற பெய­ரு­டன், சாப்ட்­வேர் சேவை­களில் கள­மி­றங்­கி­யது. இதன் தலைமை அலு­வ­ல­கம், உத்­த­ர­ பி­ர­தேச மாநி­லம், நொய்­டா­வில் உள்­ளது. இத்­து­டன், அமெ­ரிக்கா, பிரிட்­டன், பிரான்ஸ் உள்­ளிட்ட, 39 நாடு­களில், அலு­வ­ல­கங்­கள், கண்­டு­பி­டிப்­பிற்­கான ஆய்­வுக் கூடங்­கள், வினி­யோக மையங்­கள் உள்­ளன. இந்­நி­று­வ­னத்­தில், 1.20 லட்­சம் பேர் பணி­யாற்­று­கின்­ற­னர். கடந்த மே மாத நில­வ­ரப்­படி, எச்.சி.எல்., குழு­மத்­தின் வரு­வாய், 780 கோடி டால­ராக உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஜூலை 29,2018
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)