விப்ரோவை பின்னுக்கு தள்ளிய எச்.சி.எல்.,   விப்ரோவை பின்னுக்கு தள்ளிய எச்.சி.எல்., ... உணர்ந்து நடக்க வேண்­டிய நேர­மிது உணர்ந்து நடக்க வேண்­டிய நேர­மிது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கமாடிட்டி சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2018
06:19

கச்சா எண்ணெய்:
கச்சா எண்­ணெய் விலை, மூன்று வாரத்­துக்­குப் பின், கடந்த வாரம் சிறி­த­ள­வில் மீண்டு, வர்த்­த­கம் ஆகிறது. எம்.சி.எக்ஸ்., பொருள் வணிக சந்­தை­யில், கடந்த வாரம் அதிக ஏற்­றத்­தாழ்­வு­கள் இல்­லா­மல், 140 ரூபாய் விலை ஏற்ற இறக்­கங்­க­ளு­டன் வர்த்­த­கம் முடி­வுற்­றது. கடந்த வாரத்­தின் மூன்று நாட்­களில் விலை­யேற்­றம் காணப்­பட்­டது. கடந்த வாரம், சவுதி அரே­பியா, சிவப்பு கடல் வழி­யாக கச்சா எண்­ணெய் ஏற்­று­ம­தியை தற்­கா­லி­க­மாக தடை செய்­தது.

நாட்­டின் இரண்டு ஆயில் டேங்­கர்­கள், ஏமன் மற்­றும் ஈரான் நாட்டு போரா­ளி­க­ளால் தாக்­கப்­பட்­டன. இத­னால், முக்­கி­ய­மான வழித்­த­டம் பாதிக்­கப்­பட்­டது. இவ்­வ­ழித்­த­டத்­தின் வழி­யாக அமெ­ரிக்கா மற்­றும் ஐரோப்­பிய, ஆசிய நாடு­க­ளுக்கு கச்சா எண்­ணெய் ஏற்­று­மதி செய்­யப்­பட்டு வந்­தது.இத்­த­கைய அசா­தா­ரண சூழல் கார­ண­மாக, கச்சா எண்­ணெய் விலை சிறிது ஏற்­றம் கண்­டது. கடந்த புதன் கிழமை அன்று வெளி­வந்த, அமெ­ரிக்க எண்­ணெய் வார இருப்பு நில­வ­ரத்­தில், எதிர்­பார்த்­த­தை­விட இருப்பு அளவு, 2015ம் ஆண்டை ஒப்­பி­டும்­போது குறை­வா­கவே இருந்­தது.

அமெ­ரிக்­கா­வின் ஷேல் ஆயில் உற்­பத்தி, தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது. கச்சா எண்­ணெய் ஆழ்­துளை கிண­று­க­ளின் எண்­ணிக்கை, கடந்த வாரத்­தில் அதி­க­ரித்­துள்­ளது. இவ்­வா­றாக உயர்ந்து வரும் உற்­பத்தி, சர்­வ­தேச சந்­தை­யில் ஒரு சவா­லாக இருக்­கும் என கரு­தப்­ப­டு­கிறது.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 4,690 4,565 4,800 4,935என்.ஒய்.எம்.இ.எக்ஸ். (டாலர்) 68.40 67.10 69.70 71.00


தங்கம், வெள்ளி
சர்­வ­தேச சந்­தை­யில், தங்­கம் மற்­றும் வெள்ளி விலை தொடர்ந்து நான்­கா­வது மாத­மாக சரி­வில் இருந்து வரு­கிறது. 2013ம் ஆண்­டுக்­குப் பின், இதுவே தொடர் மாத சரி­வாக காணப்­ப­டு­கிறது.

அமெ­ரிக்க நாண­ய­மான டால­ரின் மதிப்பு உயர்வு, இதற்கு மிக முக்­கிய கார­ணம் ஆகும். அமெ­ரிக்க நாட்­டின் வட்டி விகி­த­மும், தங்­கம் மற்­றும் வெள்ளி விலை­யும் எதிர்­ம­றை­யான போக்கை கொண்­ட­தா­கும். கடந்த, 2004ம் ஆண்டு, 5 சத­வீ­தம் அள­வுக்கு, வட்டி விகி­தம் அமெ­ரிக்­கா­வில் இருந்­தது. அப்­போது, தங்­கம் ஒரு அவுன்ஸ், 410 டால­ராக இருந்­தது. பின், படிப்­ப­டி­யாக பொரு­ளா­தார வளர்ச்சி குறைந்து போனது உள்­ளிட்ட பல கார­ணங்­க­ளுக்­காக, வட்டி விகி­தத்தை அரசு குறைக்க வேண்­டிய கட்­டா­யத்­துக்கு வந்­தது. அவ்­வாறு குறைத்து, 0.25 சத­வீ­தம் வரை எட்­டி­யது.

தற்­போது, கடந்த இரு ஆண்­டு­க­ளாக, பொரு­ளா­தார வளர்ச்சி சுழற்சி முறை­யில் மாற்­றம் கண்ட நிலை­யில், வட்டி விகி­தம் உயர்த்­தப்­படும் சூழல் நிலவி வரு­கிறது.சீனா­வு­ட­னான வர்த்­தக மோதல், இறக்­கு­மதி மீதான அதி­கப்­ப­டி­யான வரி விதிப்பு, ஐரோப்­பிய யூனி­யன் நாடு­களில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்­க­ளுக்கு வரி விதிப்பு போன்ற அமெ­ரிக்­கா­வின் நட­வ­டிக்­கை­க­ளால், அசா­தா­ரண சூழல் நிலவி வந்­தது.வட்டி விகித உயர்­வால், அமெ­ரிக்கா மற்­றும் மேலை நாடு­களில், அரசு கரு­வூல பத்­தி­ரங்­க­ளின் ஆதா­யம் உயர்­வதை அடுத்து, முத­லீட்­டா­ளர்­கள் மத்­தி­யில், தங்­கம் மீதான முத­லீட்டு ஆர்­வம் குறை­யும். மேலும், அரசு சார்ந்த முத­லீ­டு­களை அதி­கப்­ப­டுத்தி, அதன் விளை­வா­க­வும் விலைச்­ச­ரிவு தொடர்ந்து நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கிறது.

தற்­போ­தைய சூழ­லில் சர்­வ­தேச சந்­தை­யில், 1,180 டாலர் என்­பது நல்ல சப்­போர்ட்­டாக இருக்­கும். உலக அள­வில், ஆப­ர­ணத் தங்­கம் நுகர்வு மற்­றும் இறக்­கு­ம­தி­யில், இந்­தியா இரண்­டாம் இடத்­தில் உள்­ளது. சீனா முத­லி­டம் வகித்து வரு­கிறது. இந்­தி­யா­வின் தங்­கம் இறக்­கு­மதி, கடந்த சில ஆண்­டு­க­ளாக சரிந்­து­வ­ரும் போக்­கில் உள்­ளது.இதற்கு பழைய தங்­கத்தை, மறு­சு­ழற்சி முறை­யில் புதிய தங்க கட்­டி­க­ளாக மாற்­றப்­பட்டு வரு­வ­தும், அதி­க­ரிக்­கும் பண­வீக்­கத்­தால், நடுத்­தர குடும்­பங்­களில் செல­வி­னம் அதி­க­ரித்து, அவர்­க­ளது தங்க சேமிப்பு ஆர்­வம் குறைந்து வரு­வ­தும் கார­ண­மாக கூறப்­ப­டு­கிறது.

தங்கம்:
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 29,650 29,480 29,855 30,050காம்எக்ஸ் (டாலர்) 1,210 1,197 1,225 1,237

வெள்ளி:
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 38,000 37,520 38,440 38,900காம்எக்ஸ் (டாலர்) 15.35 15.15 15.70 15.95

செம்பு:
செம்பு விலை, கடந்த வாரம் அதி­க­ரித்து வர்த்­த­கம் ஆகி­யது. முந்­தைய ஆறு வார சரி­வி­லி­ருந்து மீண்டு, அதி­க­ரித்து வரு­கிறது. செம்பு உற்­பத்தி சுரங்­கத்­தில் ஏற்­பட்ட தொழி­லா­ளர்­கள் வேலை நிறுத்­தம் மற்­றும் பேச்­சில்­ ஏற்­பட்ட நிலை கார­ண­மா­க­வும் விலை ஏற்­றம் கண்­டது.

உலக அள­வில், செம்பு நுகர்­வில், சீனா முத­லி­டம் வகிக்­கிறது. ஐரோப்­பிய யூனி­யன் நாடு­களில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் கார்­க­ளுக்கு, அமெ­ரிக்காவில் அதி­கப்­ப­டி­யான வரி விதிக்­கப்­படும் என, அறி­வித்து இருந்­தது. பின்­னர் ஏற்­பட்ட பேச்­சில் இதை விலக்­கிக் கொள்­ளும் நிலை ஏற்­பட்­டது. இத்­த­கைய சூழ­லில், செம்பு விலை ஏற்­றம் கண்­டது. இருப்­பி­னும், லண்­டன் மெட்­டல் எக்ஸ்­சேஞ்­சில், செம்பு இருப்­பு­கள் அதி­க­ரித்து வரு­வது, விலை ஏற்­றத்தை கட்­டுப்­ப­டுத்­தும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 424.50 421.00 427.00 431.00

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஜூலை 30,2018
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)