உணர்ந்து நடக்க வேண்­டிய நேர­மிதுஉணர்ந்து நடக்க வேண்­டிய நேர­மிது ... வட்­டி­ வி­கி­தம் உயரும்? வட்­டி­ வி­கி­தம் உயரும்? ...
இணைப்பு என்­பது முதிர்ச்­சி­யின் அடை­யா­ளம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2018
06:21

ஐடியா நிறு­வ­ன­மும், வோட­போன் நிறு­வ­ன­மும் இணை­வ­தற்கு, மத்­திய தொலை­தொ­டர்பு துறை அனு­மதி அளித்­துள்­ளது. இந்­திய தொலை­தொ­டர்பு தொழி­லில் மைல்­கல் நிகழ்வு இது.

இதன் விளை­வு­கள் எப்­படி இருக்­கும்?
தொலை தொடர்பு துறை வள­ரும்­போது, சேவை­க­ளின் தரம் உயர வேண்­டும். மக்­க­ளு­டைய எதிர்­பார்ப்­பு­கள் நிறைவு செய்­யப்­பட வேண்­டும். இதன் கார­ண­மாக, சிறிய நிறு­வ­னங்­கள் படிப்­ப­டி­யாக இணைந்து, வலு­வான பெரிய நிறு­வ­னங்­கள் உரு­வா­கின்­றன. இந்­தி­யா­வி­லும் அப்­ப­டித்­தான் நடந்து கொண்­டி­ருக்­கிறது. வோட­போன் நிறு­வ­ன­மும், ஐடியா நிறு­வ­ன­மும் பல்­வேறு தொலை­தொ­டர்பு வட்­டங்­களில் ஆழ வேரூன்றி உள்­ளன. பல ஆண்­டு­க­ளாக தத்­த­மது வாடிக்­கை­யா­ளர்­க­ளின் தேவைக்­கேற்ப, இவை சேவை­களை வழங்கி வந்­தன.

இந்­நி­லை­யில், ரிலை­யன்ஸ் ஜியோ போன்ற மிகப்­பெ­ரும் நிறு­வ­னம் தொலை­தொ­டர்பு துறைக்­குள் நுழை­யும்­போது, போட்டி கடு­மை­யா­கி­விட்­டது. சேவை­க­ளுக்­கான கட்­ட­ணங்­கள் ஒரு­பக்­கம் வீழ்ச்சி அடைய, சேவை­யின் தரம் மறு­பு­றம் உயர்ந்து கொண்டே போக வேண்­டிய தேவை. மக்­களும், விலை மலி­வான அதே­ச­ம­யம், தர­மான சேவை­களை நோக்கி நக­ரத் துவங்­கி­விட்­ட­னர்.

இதன் விளை­வாக, தமக்­கான சந்­தையை தக்­க­வைத்­துக் கொள்ள, நிறு­வ­னங்­கள் இணைந்து செயல்­ப­டு­வது காலத்­தின் கட்­டா­யம். வோட­போன் நிறு­வ­ன­மும், ஐடியா நிறு­வ­ன­மும் இப்­ப­டித்­தான் கைகோர்க்க முன்­வந்­தன. பல்­வேறு சட்ட ரீதி­யான, நெறி­முறை ரீதி­யான அனு­ம­தி­க­ளுக்­காக காத்­தி­ருந்­தன இந்த நிறு­வ­னங்­கள். தற்­போது அதற்கு அனு­மதி கிடைத்­துள்­ளது, முக்­கி­ய­மான முன்­னேற்­றம்.

இதன் அர்த்­தம் என்ன?
இனி, பார்தி ஏர்­டெல், இந்­தி­யா­வின் மிகப்­பெ­ரிய தொலை­தொ­டர்பு சேவை நிறு­வ­னம் என்ற நிலை­யில் இருந்து ஒரு­படி இறங்­கி­விட்­டது. வோட­போன் – ஐடி­யா­தான் மிகப்­பெ­ரிய நிறு­வ­னம். இந்­திய தொலை­தொ­டர்பு சந்­தை­யில், 37 சத­வீத பங்கை இவ்­விரு நிறு­வ­னங்­களும் பெற­வி­ருக்­கின்­றன. 43 கோடி வாடிக்­கை­யா­ளர்­கள் இவர்­க­ளி­டம் இருப்­பர். பார்தி ஏர்­டெல்­லும், ஜியோ­வும் இதற்­க­டுத்து தான் இருப்­பர். இந்த இணைப்பு, பல மட்­டங்­களில் பல்­வே­று­வி­த­மான வாய்ப்­பு­களை உரு­வாக்­கித் தந்­தி­ருக்­கிறது. தொலை­தொ­டர்பு துறை­யைப் பொறுத்­த­வரை, சேவை வழங்­கும் நிறு­வ­னங்­கள் படிப்­ப­டி­யாக குறைந்து, வலு­வான நிறு­வ­னங்­கள் உரு­வா­வது பய­னு­டை­யது.

அந்த வகை­யில் வோட­போன் – ஐடியா இணைந்த பின், இந்­தி­யா­வில் மொத்­தம், 10 நிறு­வ­னங்­கள் தான் இருக்­கும். அடுத்த சில ஆண்­டு­களில், மேலும் சில நிறு­வ­னங்­கள் இணை­யக் கூடும். இத­னால், வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு சேவை­களை விரைந்து தர முடி­யும். உதா­ர­ண­மாக, வோட­போன், நக­ரப் பகு­தி­களில் வலு­வா­னது; ஐடி­யாவோ, ஊர­கப் பகு­தி­களில் வலு­வா­னது. இரு நிறு­வ­னங்­களும் இணை­யும்­போது, சேவை­கள் பொது­வா­ன­வை­யா­கும். ஊரக பகு­தி­க­ளுக்­கும் வோட­போ­னின் தனித்­து­வ­மான சேவை­கள் போய் சேரும்; அதோடு, சேவை­க­ளின் கட்­ட­ணங்­கள் குறை­யும்.

ஏற்­க­னவே ஜியோ­வோடு போட்டி போட வேண்­டி­யி­ருப்­ப­தால், அதற்கு இணை­யாக சேவைக் கட்­ட­ணங்­களை தர­வேண்­டிய நிலைமை. இதில், இரு நிறு­வ­னங்­கள் இணை­யும்­போது, பணி­யா­ளர்­க­ளின் எண்­ணிக்கை பர­வ­லா­கும்; பின்­னர் இயங்­கும் தொழில்­நுட்­பங்­கள் பகிர்ந்­து­கொள்­ளப்­படும்; திறன்­களை மேம்­ப­டுத்­து­வது சுல­ப­மா­கும். இத­னால், செல­வு­கள் பெரு­ம­ளவு குறை­யும். இதன் பயன் வாடிக்­கை­யா­ளர்­க­ளுகே வந்து சேரும். செலவு மிச்­ச­மா­கக்­கூ­டிய இனங்­களில் ஒன்று, மொபைல் போன் டவர்­கள். இரு நிறு­வ­னங்­களும், தனித்­த­னியே டவர்­க­ளுக்­குச் செலுத்தி வந்த வாடகை இனி இருக்­காது.

மேலும், ஒரே டவரைப் பயன்­ப­டுத்தி, ‘3ஜி, 4ஜி’ சேவை­க­ளை­யும் வழங்­கக்­கூ­டிய வாய்ப்­பு­கள் ஆரா­யப்­படும்.இதே­போல், உரி­மக் கட்­ட­ணம், லைசென்ஸ் கட்­ட­ணம், விற்­பனை கமி­ஷன்­கள், தொலை­தொ­டர்பு நிறு­வ­னங்­க­ளுக்கு இடையே செலுத்த வேண்­டிய இன்­டர்­க­னெக் ஷன் கட்­ட­ணங்­கள் ஆகி­ய­வை­யும் பெரு­ம­ளவு குறை­யும்.செல­வு­கள் குறை­யும்­போது, சேவை­யின் தரத்தை உயர்த்த, புதிய முத­லீ­டு­கள் செய்ய முடி­யும். ‘4ஜி பிளஸ், 5ஜி’ ஆகி­யவை, அடுத்து வரக்­கூ­டிய முக்­கி­ய­மான முன்­னேற்­றங்­கள். இவற்றை இந்­திய சந்­தை­யில் அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டும் எனில், அதற்­குத் தேவை­யான தொழில்­நுட்ப முத­லீ­டு­கள் அதி­கம்.

வோட­போன் – ஐடியா நிறு­வ­னம் அதைச் செய்ய முனைப்பு காட்ட முடி­யும். இவை­யெல்­லாம் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­குக் கிடைக்­கும் பலன்­கள்.லாபம் பெரு­கும்நிறு­வன ரீதி­யாக பார்த்­தால், வோட­போன் – ஐடியா நிறு­வ­னத்தை நம்பி, அதன் சந்­தைப் பங்கு, வாடிக்­கை­யா­ளர் எண்­ணிக்­கை­யைப் பார்த்து, வெளி­நாட்டு நிறு­வ­னங்­களும், வங்­கி­களும் கடன் கொடுக்க முன்­வ­ரும். தம்­மு­டைய நஷ்ட அள­வைக் குறைத்­துக்­கொண்டு, படிப்­ப­டி­யாக லாபத்தை நோக்கி நக­ர­வும் முடி­யும்.

இரு நிறு­வ­னங்­களும் இணை­வ­தற்கு, தொலை­தொ­டர்­புத் துறை அனு­மதி வழங்­கி­ய­வு­ட­னேயே, பங்­குச் சந்­தை­யில், ஐடியா நிறு­வ­னத்­தின் பங்­கு­கள் விலை­யு­யர்ந்­தது இங்கே கவ­னிக்­கத்­தக்­கது. இரு நிறு­வ­னங்­களும் ஒன்றை ஒன்று சார்ந்து வள­ரக்­கூ­டிய நிறு­வ­னங்­கள்; போட்டி நிறு­வ­னங்­கள் அல்ல. அத­னால், இந்த இணைப்பு என்­பது இயற்­கை­யா­னது; இயல்­பா­னது என்று சந்தை ஆய்­வா­ளர்­கள் கரு­து­கின்­ற­னர். புதிய நிறு­வ­னத்­துக்­குச் சவால்­கள் இல்­லா­மல் இல்லை. குறிப்­பாக ஜியோ­வும், பார்தி ஏர்­டெல்­லும் தங்­க­ளு­டைய முத­லீ­டு­களை அதி­கப்­ப­டுத்தி, புதிய சேவை­களை விரைந்து மலி­வான விலைக்­குக் கொடுக்க முன்­வ­ரும். ஏற்­க­னவே, பார்தி ஏர்­டெல் மலிவு விலை­யில், ‘ப்ரீ­பெய்டு’ சேவை­க­ளைக் கொடுத்து, போட்­டியை சூடாக்­கி­விட்­டது.

இது தொலை­தொ­டர்பு துறைக்கு ஏற்­பட்­டுள்ள நற்­பேறு. எண்­ணற்ற சேவை­யா­ளர்­கள் குறைந்து, தர­மிக்க சேவை­யா­ளர்­கள் மட்­டும் நீடிக்க முடி­யும். அதன் மூலம், ஒரு­வித நிதா­னம் ஏற்­படும்.இந்த விலைப் போட்டி, அடுத்த சில ஆண்­டு­க­ளுக்­குத் தொட­ரும். அப்­போது, வாடிக்­கை­யா­ளர்­கள் அதன் பயனை அனு­ப­விப்­பர்.அதே­ச­ம­யம், சர்­வ­தேச அள­வில் ஏற்­படும் முன்­னேற்­றங்­கள் இங்கே விரைந்து அறி­மு­க­மா­க­வும் செய்­யும். மற்ற எந்­தத் துறை­யி­லும் இல்­லாத அள­வுக்கு, தொலை­தொ­டர்பு துறை­யில் தொழில்­நுட்ப முன்­னேற்­றங்­களும், கண்­டு­பி­டிப்­பு­களும் பெருகி வரு­கின்­றன. அவற்றை இந்­தி­யா­வுக்­குள் அறி­மு­கப்­ப­டுத்த விரி­வான நெட்­வொர்க்­கும், வலு­வான முத­லீ­டு­களும் தேவை.

நிறு­வ­னங்­கள் இணைந்து வலு உரு­வா­வது, இத்­த­கைய முன்­னேற்­றங்­க­ளைக் கொண்டு வரு­வ­தற்­கான அச்­சா­ர­மாக இருக்­கும். எல்­லா­வற்­றை­யும் விட முக்­கி­யம், வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­குக் கொடுக்­கப்­படும் நம்­பிக்கை. திடீ­ரென்று அழைப்­பு­கள் துண்­டிக்­கப்­ப­டு­வது, குரல் ஒலிப்பு வீரி­யம், இணைய இணைப்பு வசதி என்று ஒவ்­வொரு துறை­யி­லும் இந்­தி­யர்­கள் மேன்­மே­லும் தரத்­தைக் கோர முடி­யும். அதை ஒரு நிறு­வ­னம் வழங்­க­வில்­லை­யென்­றால், மற்­ற­வ­ரி­டம் போய் பெற்­றுக்­கொள்ள முடி­யும். வோட­போன் – ஐடியா இணைப்பு, தொலை­தொ­டர்பு துறை அடைந்­துள்ள முதிர்ச்­சி­யையே காட்­டு­கிறது; நிலைத்த, நீடித்த சேவைக்­கான உத்­த­ர­வா­தத்தை உறு­தி­ப­டுத்­து­கிறது. மக்­கள் விரும்­பு­வ­தும் இதைத்­தானே.

–ஆர்.வெங்­க­டேஷ், பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
business news
புதுடில்லி : கடந்த ஆண்டில், கொரோனா காலத்தை விட, ஆண்களுக்கான ஆடம்பர பிராண்டு பொருட்கள் விற்பனை அதிகரித்து ... மேலும்
business news
மும்பை : ‘யூட்டிலிட்டி வெகிக்கிள்’ எனும், பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என, ‘பிட்ச் ... மேலும்
business news
புதுடில்லி : மூன்று ஆண்டுகளுக்கு பின், மீண்டும் வானில் பறக்க உள்ளன ‘ஜெட் ஏர்வேஸ்’ விமானங்கள். ஜெட் ஏர்வேஸ் ... மேலும்
business news
உலகலாவிய தொழில்நுட்ப பிராண்டான ஒன் பிளஸ், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் மிகவும் அணுகக்கூடிய 5ஜி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)