பதிவு செய்த நாள்
30 ஜூலை2018
23:38
நாமக்கல் : தமிழகம் மற்றும் கேரளாவில், முட்டை கொள்முதல் விலை, 470 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. முட்டை உற்பத்தி, விற்பனை நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதையடுத்து, 480 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை, 10 காசு குறைத்து, 470 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 495, ஐதராபாத், 425, விஜயவாடா, 442, பர்வாலா, 385, மும்பை, 493, மைசூரு, 468, பெங்களூரு, 462, கோல்கட்டா, 502, டில்லி, 412. பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், கிலோ, 88 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முட்டைக்கோழி விலையை, ஐந்து ரூபாய் குறைத்து, 83 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|