‘சரக்கு போக்குவரத்து செலவு குறைக்கப்படும்’‘சரக்கு போக்குவரத்து செலவு குறைக்கப்படும்’ ... சென்னையில் தகவல் தொகுப்பு மையம் சென்னையில் தகவல் தொகுப்பு மையம் ...
தொழில் துறைக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது: பிரதமர் மோடி உரைக்கு, ‘அசோசெம்’ பாராட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2018
23:48

புதுடில்லி : ‘பிர­த­மர் மோடி, இதர துறை­களை போல, தொழில் துறை­யும் ஊக்­கு­விக்­கப்­படும் என, மீண்­டும் உறுதி அளித்­தி­ருப்­ப­தால், அத்­து­றை­யி­ன­ரின் நம்­பிக்கை அதி­க­ரித்­துள்­ளது’ என, இந்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் கூட்­ட­மைப்­பான, ‘அசோ­செம்’ தெரி­வித்­துள்­ளது.

பிர­த­மர் மோடி, நேற்று முன்­தி­னம், உத்­தர பிர­தே­சத்­தில், 60 ஆயிரத்து, 228 கோடி ரூபாய் மதிப்­பி­லான, 81 முத­லீட்டு திட்­டங்­களை துவக்கி வைத்­தார். அப்­போது மோடி பேசி­ய­தா­வது: விவ­சாயி, தொழி­லா­ளர், அரசு ஊழி­யர், வங்­கி­யா­ளர் உள்­ளிட்­டோ­ரைப் போல, நாட்­டின் வளர்ச்­சிக்கு, தொழி­ல­தி­பர்­களும் முக்­கிய பங்கு வகிக்­கின்­ற­னர். அவர்­கள் தான், நாட்­டின் வளர்ச்சி இயந்­தி­ரங்­கள்.

நாங்­கள் உண்­மை­யா­க­வும், வெளிப்­ப­டை­யா­க­வும் செயல்­ப­டு­வ­தால், தொழில் அதி­பர்­க­ளு­டன் சேர்ந்து நிற்க வெட்­கப்­ப­ட­வில்லை. அதே­ச­ம­யம், தவறு செய்­வோர் தண்­ட­னையை அனு­ப­வித்தே தீர வேண்­டும். தொழில் துறை வளர்ச்­சிக்­கான ஊக்­கு­விப்பு திட்­டங்­கள் தொட­ரும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

உத்வேகம்:
இது குறித்து, அசோ­செம் தலை­வர் சந்­தீப் ஜஜோ­டியா வெளி­யிட்­டு உள்ள அறிக்கை: தொழில் துறை ஊக்­க­விக்­கப்­படும் என, பிர­த­மர் மீண்­டும் உறு­தி­ப்பட தெரி­வித்­துள்­ளார். இது, எதிர்­கா­லம் குறித்து, தொழில் நிறு­வ­னங்­கள் கொண்­டி­ருந்த கவ­லை­களை போக்­கி­யுள்­ளது. தொழில் துறை­யி­ன­ரின் நம்­பிக்­கையை அதி­க­ரிக்க துணை­பு­ரிந்­துள்­ளது. அது­மட்­டு­மின்றி, ஸ்தி­ர­மான வளர்ச்சி என்ற இலக்கை நோக்­கிய, நீண்ட கால செயல்­பாட்­டிற்­கான உத்­வே­கத்­தை­யும் அளித்­து உள்­ளது.

அரசு, தொழில் நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து செயல்­ப­டு­வ­தன் மூலம், பல்­வேறு துறை­களில், மிகப் பெரிய முத­லீ­டு­களை ஈர்க்க முடி­யும். இத­னால், வேலை­வாய்ப்­பு­கள் அதி­க­ரிக்­கும். உத்­தர பிர­தே­சத்­தில், தொழில்­ம­ய­மாக்­கம் மற்­றும் அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­கள் மேம்­படும். முத­லீட்டு திட்­டங்­களின் செய­லாக்­கம் குறித்து ஆய்வு செய்ய, உ.பி., அரசு, பல்­வேறு அமைச்­ச­கங்­களின் பங்­க­ளிப்­பு­டன், தனி குழுவை ஏற்­ப­டுத்­த­லாம்.

இது ­போன்ற குழு அமைப்­பது, தொழில் துறை­யி­ன­ருக்கு, அர­சின் மீது நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்த உத­வும். இதன் எதி­ரொ­லி­யாக, தனி­யார் முத­லீ­டு­களும் அதிக அள­வில் குவி­யும். திட்­டங்­கள் முடி­வ­டைந்த பிறகே, முத­லீ­டு­கள் வாயி­லான உண்­மை­யான பயன்­கள் தெரி­ய­வ­ரும்.

வர்த்தக சூழல் :
குஜ­ராத், ஒடிசா, மஹா­ராஷ்­டிரா மற்­றும் இதர மாநி­லங்­களில், தொழில் மற்­றும் வர்த்­த­கச் சூழல் நன்கு உள்­ளது. அதற்கு நிக­ரான சூழலை, உ.பி.,யில் ஏற்­ப­டுத்த, முதல்­வர் யோகி ஆதித்­ய­நாத் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். உ.பி.,யில் இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கும் திட்­டங்­களை செயல்­ப­டுத்த வேண்­டும். மேலும், முத­லீ­டு­கள் மேற்­கொள்­ளப்­பட்ட பல்­வேறு திட்­டங்­களின் பணி­க­ளை­யும் கண்­கா­ணிக்க வேண்­டும்.

அத்­து­டன், நாடு முழு­வ­தும் பிர­சா­ரம் மேற்­கொண்டு, பல்­வேறு மாநி­லங்­களில் இருந்து, மிகப் பெரிய அள­வில் முத­லீ­டு­களை ஈர்க்க வேண்­டும். இந்த நட­வ­டிக்­கை­கள், உ.பி., மாநி­லம் மட்­டு­மின்றி, ஒட்­டு­மொத்த நாட்­டின் வளர்ச்­சிக்­கும் உத­வும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

பிர­த­ம­ரின் உரை, எதிர்­கா­லம் குறித்து, தொழில் நிறு­வ­னங்­கள் கொண்­டி­ருந்த கவ­லையை போக்­கி­யுள்­ளது. தொழில் துறை­யி­ன­ரின் நம்­பிக்­கையை அதி­க­ரிக்க துணை­பு­ரிந்­துள்­ளது.
–அசோசெம்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)