‘டீசர்வ்’ தேயிலை ஏலத்தில் ஏற்றம்; லாரிகள், ‘ஸ்டிரைக்’ முடிவுக்கு வந்ததால் கிராக்கி‘டீசர்வ்’ தேயிலை ஏலத்தில் ஏற்றம்; லாரிகள், ‘ஸ்டிரைக்’ முடிவுக்கு ... ... ஜூலையில் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.96,483 கோடியாக உயர்வு ஜூலையில் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.96,483 கோடியாக உயர்வு ...
வங்கிகளின் மோசமான காலம் முடிந்தது; இரண்டு ஆண்டுகளில் தர நிர்ணயம் உயரும்: எஸ் அண்டு பி கணிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2018
23:35

புதுடில்லி : ‘இந்­திய வங்­கி­க­ளின் சோத­னைக் காலம் பெரும்­பா­லும் முடிந்து விட்­டது. அத­னால், அடுத்த இரண்டு ஆண்­டு­களில், அவற்­றின் தர நிர்­ண­யம் உய­ரும்’ என, எஸ் அண்டு பி குளோபல் ரேட்­டிங்ஸ் நிறுவ­னம் தெரி­வித்­து உள்ளது.

இந்­நி­று­வ­னம் ‘இந்­திய வங்­கி­க­ளின் மோச­மான காலம் பெரும்­பா­லும் முடி­வ­டைந்­தது’ என்ற தலைப்­பில், ஆய்­வுக் கட்­டுரை வெளி­யிட்­டுள்­ளது. அதில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது:

வாராக்கடன் :
ரிசர்வ் வங்­கி­யின் புதிய விதி­மு­றை­களும், மத்­திய அர­சின் சீர்­தி­ருத்­தங்­களும், இந்­திய வங்­கித் துறைக்கு உத்­வே­கம் அளித்­துள்­ளன. வங்­கி­க­ளின் மொத்த கட­னில், வாராக் கட­னாக மாற வாய்ப்­புள்ள கணக்­கு­கள், 13 – -15 சத­வீ­தம் உள்ளன. இவற்றை, வங்­கி­கள் அடை­யா­ளம் கண்டு, கடன் மீட்பு நடவடிக்­கை­களை முடுக்கி விட்­டுள்ளன. இதனால், இடர்­பாட்­டுக்கு உரிய கடன்­கள் இல்­லாத நிலை உரு­வா­கும்.

மறைக்க முடியாது :
வங்­கி­கள், வாராக்கட­னுக்­காக அதிக நிதி ஒதுக்­கு­வ­தால், அவற்­றின் சொத்து மதிப்பு சரி­கிறது. மூல­தன இருப்பு விகி­தம் குறை­கிறது. இதை தடுக்க, மத்­திய அர­சின், மறு பங்கு மூல­தன திட்­டம் உத­வும். இத்­த­கைய செயல்­பாடு­கள், வங்­கித் துறை­யின் பல­வீ­னத்தை போக்கி, அடுத்த இரண்டு ஆண்­டு­களில், வலி­மை­யா­ன­தாக மாற்­றும். அதே­ச­ம­யம், எதிர்­பா­ராத வித­மாக, இடர்­பாட்­டுக்கு உரிய கடன்­கள் அதி­க­ரித்­தால், வளர்ச்சி சற்று தாம­த­மா­கும்.

வாராக் கட­னாக மாற வாய்ப்­புள்ள கடன்­களை கண்­ட­றி­யும் நட­வ­டிக்­கை­யும், பல நிறு­வ­னங்­கள் மீண்­டும் லாப பாதைக்கு திரும்பி வரும் சூழ­லும், வங்­கித் துறை வளர்ச்­சிக்கு சாத­க­மான அம்­சங்­க­ளாக உள்­ளன. மேலும், திவால் சட்­டத்­தின் கீழ், வாராக் கடனை விரைந்து மீட்­கும் நட­வ­டிக்­கை­களும், வங்­கி­கள், மோச­மான கடன்­களில் இருந்து மீள வழி­வகை செய்­யும். ரிசர்வ் வங்­கி­யின் கடுமை­யான விதி­மு­றை­கள் கார­ண­மாக, வங்­கி­கள், வாராக் கடன் கணக்கை குறைத்து காட்டி, சொத்து மதிப்­பின் உண்­மை­யான பல­வீ­னத்தை மறைக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டு உள்­ளது.

நிதி ஒதுக்கீடு :
இந்­நி­லை­யில், வங்­கி­க­ளின் சொத்து மதிப்பு குறித்து, ரிசர்வ் வங்கி மீண்டும் மதிப்­பீடு செய்து வரு­கிறது. குறிப்­பாக, 240 நிறு­வ­னங்­க­ளின் கடன்­களை ஆராய்ந்து வரு­கிறது. இவற்­றில், பெரும்­பான்மை கடன்­கள், இடர்­பாட்­டிற்கு வாய்ப்­புள்­ள­தாக ஏற்க­னவே கணிக்­கப்­பட்­டுள்­ளது. அக்­க­டன்­க­ளுக்கு, உரிய நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளதா என்­பது ஆய்வு செய்­யப்­ப­டு­கிறது. இது­போன்ற நட­வ­டிக்­கை­க­ளால், இந்­திய வங்­கி­க­ளின் சோத­னைக் காலம் பெரும்­பா­லும் முடிந்து விட்­ட­தா­கவே கூற வேண்­டும். அத­னால், அடுத்த இரண்டு ஆண்­டு­களில், வங்­கி­க­ளின் தர நிர்­ண­யம், அதி­க­ரிக்­கவே செய்­யும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

நான்கு அம்ச திட்டம் :
மத்­திய அரசு, வங்­கித் துறையை மேம்­ப­டுத்த, நான்கு அம்ச திட்­டத்தை வகுத்­துள்­ளது.
* இடர்­பாட்­டிற்கு வாய்ப்­புள்ள கடன்­களை கண்டறி­தல்
* வங்­கி­க­ளுக்கு மறு­பங்கு மூல­த­னம் வழங்­கு­தல்
* வங்கி வளர்ச்சி திட்­டங்­களை உரு­வாக்­கு­தல்
* வங்­கித் துறை­யில் சீர்­தி­ருத்­தங்­கள் செய்­வது
மேற்­கண்­ட­வற்­றில், முதல் மூன்று அம்­சங்­களில் குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்­றம் ஏற்­பட்­டுள்­ளது. வங்கி சீர்­தி­ருத்த திட்­டங்­கள் போதிய அள­விற்கு மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை
– எஸ் அண்டு பி குளோபல் ரேட்டிங்ஸ்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)