சரக்கு – சேவை வரிகளை மூன்றாக குறைக்க பரிசீலனைசரக்கு – சேவை வரிகளை மூன்றாக குறைக்க பரிசீலனை ... சேமிப்­பில் அதிக பலன் அளிக்­கும் சிறிய செயல்­கள் சேமிப்­பில் அதிக பலன் அளிக்­கும் சிறிய செயல்­கள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு சந்தையில், ‘சப் – புரோக்கர்’ பிரிவு நீக்கப்படுகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2018
00:42

புதுடில்லி:பங்­குச் சந்­தை­யில், ‘சப் – புரோக்­கர்’ எனப்­படும் துணை தர­கர் பிரிவு நீக்­கப்­ப­டு­வ­தாக, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு ஆணை­ய­மான, ‘செபி’ தெரி­வித்­து உள்­ளது.

இது தொடர்­பாக, செபி வெளி­யிட்­டுள்ள அறிக்கை:கடந்த, ஜூன் 18ல், நடை­பெற்ற, செபி இயக்­கு­னர் குழு கூட்­டத்­தில், துணை தர­கர் பிரிவை நீக்­கும் தீர்­மா­னத்­திற்கு ஒப்­பு­தல் வழங்­கப்­பட்­டது. அத­னால், இனி துணை தர­க­ராக பதிவு செய்­யக் கோரும் விண்­ணப்­பங்­கள் ஏற்­கப்­பட மாட்­டாது.

ஏற்க­னவே, துணை தர­க­ராக பதிவு செய்­யக் கோரி வந்த விண்­ணப்­பங்­கள், பங்­குச் சந்­தை­கள் வாயி­லாக, விண்­ணப்­ப­தா­ரர்­ களி­டம் திரும்ப அளிக்­கப் ­படும்.

ஒப்படைக்கலாம்

தற்­போது உள்ள துணை தர­கர்­கள், 2019, மார்ச், 31க்குள், வர்த்­தக உறுப்­பி­னர் அல்­லது அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நபர் ஆக, பதிவு செய்து கொள்­ள­லாம். அவ்­வாறு மாற விரும்­பாத துணை தர­கர்­கள், அடுத்த ஆண்டு, மார்ச் இறு­திக்­குள், தங்­கள் உரி­மத்தை திரும்ப ஒப்­படைத்து விட வேண்­டும்.வர்த்­தக உறுப்­பி­னர் அல்­லது அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நப­ராக மாறி­யோ­ரின், துணை தர­கர் உரி­மம் ரத்து செய்­யப்­படும்.அவ்­வாறு மாறா­மல் உள்­ளோ­ரின், துணை தர­கர் உரி­மம் திரும்­பப் பெறப்­படும்.

தற்­போது உள்ள துணை தரகர்­கள் அனை­வ­ரும், நடப்பு, 2018- – 19ம் நிதி­யாண்­டிற்கு, உரி­மத்தை புதுப்­பிப்­ப­தற்­கான தொகையை செலுத்த வேண்­டும்.துணை தர­கர்­கள், அடுத்த நிதி­யாண்­டிற்­கும் சேர்த்து, உரி­மத்தை புதுப்­பிக்க ஏற்­க­னவே பணம் செலுத்­தி­யி­ருந்­தால், சம்­பந்­தப்­பட்ட பங்­குச் சந்­தை­கள் அளிக்­கும் ரசீ­தின்­படி, அத்­தொகை, திரும்ப வழங்­கப்­படும்.துணை தர­கர்­கள், உரி­மத்தை ஒப்­ப­டைக்­கவோ அல்­லது வர்த்­தக உறுப்­பின­ராக மாறவோ உரிய நிர்­வாக வச­தி­களை, பங்குச் சந்­தை­கள் ஏற்­படுத்தி தர வேண்­டும்.

முன்பேர சந்தை

முன்­பேர சந்தை பிரிவில், அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நப­ராக செயல்­பட, துணை தர­கர்­கள் ஏற்கனவே உரி­மம் பெற்­றி­ருந்­தால், அவர்­கள், ரொக்­கப் பிரி­வில், அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நப­ராக பதிவு செய்து வர்த்­த­கத்தை தொட­ர­லாம்.அது­போல, முன்­பேர சந்­தை­யில் ஈடு­பட அங்­கீ­கா­ரம் பெறாத துணை தர­கர்­கள், அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நபர் என்ற பிரி­விற்கு மாற­லாம். இதற்கு, ரொக்­கப் பிரி­வில் பின்­பற்­றும் நடை­மு­றை­க­ளின்­படி, பங்­குச் சந்­தை­கள் பதி­வு­களை மேற்­கொள்ள வேண்­டும்.

ஆணை­யத்­தின் விதி­முறை­க­ளின்­படி, தகு­தி­யுள்ள துணை தர­கர்­கள், விரும்­பி­னால், பங்­குத்தர­கர்­க­ளா­க­வும் மாற­லாம்இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

என்ன காரணம்?

பங்­குச் சந்­தை­களில் பதிவு பெற்ற, பங்­குத் தரகு நிறு­வ­னங்­க­ளின் கீழ், முக­வர்­கள் போல, துணை தரகு நிறு­வ­னங்­கள் செயல்­ப­டு­கின்­றன. இவை, பங்கு வர்த்­தக ஆலோ­ச­னை­க­ளை­யும், சேவை­களை­யும் முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு வழங்கி வரு­கின்­றன. இதே சேவை­களை, பங்­குச் சந்­தை­க­ளின் உரி­மம் பெற்ற, அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நபர்­களும் வழங்­கு­கின்­ற­னர்.

பங்­குத் தர­கர்­கள், பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு ஆணை­யத்­தி­ட­மும், அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நபர்­கள், பங்­குச் சந்­தை­க­ளி­லும் பதிவு செய்­கின்­ற­னர்.இரு பிரி­வு­க­ளுக்­கும் பெரிய வேறு­பாடு இல்லை என்­ப­தால், துணை தர­கர்­கள் பிரிவு நீக்­கப்­ப­டு­வ­தாக, பங்கு சந்­தை­யா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)