பதிவு செய்த நாள்
06 ஆக2018
00:03
நீண்ட கால நோக்கில் திட்டமிட்டு செயல்படும் போதே சேமிப்பின் முழு பலனை பெற முடியும். இதற்காக எளிய வழிகளை பின்பற்றினாலே போதுமானது. சேமிக்கும் அளவுக்கு வருமானம் இல்லை என்று சொல்வதைவிட, சேமிப்பிற்கான சின்ன சின்ன வழிகளை கண்டறிந்து செயல்படுத்தலாம். இதன் மூலம், 10ஆண்டுகளில் பெரிய அளவில் பலன் பெற முடியும். அதற்கான யோசனைகள்:
இதுவே சரியான காலம்
இத்தனை காலம் சேமிக்காமல் இருந்துவிட்டோமே என நினைத்து, சேமிப்பை இனியும் தள்ளிப்போட வேண்டாம். சேமிப்பை பொறுத்தவரை முன்னதாகவே துவக்குவது அதிக பலன் அளிக்கும் என்றாலும், இப்போதும் தாமதமாகிவிடவில்லை. இதுவே சரியான காலம் என நினைத்து, சேமிக்கத் துவங்குங்கள்.
வீண் செலவுகள்
சேமிப்பை துவக்குவது என தீர்மானித்ததும் அதை செயல்படுத்துவதற்கான வழிகளை கண்டறிய வேண்டும். முடிந்த வரை வீண் செலவுகளை கண்டறிந்து குறைக்க வேண்டும். இந்த செலவுகளில் மிச்சமாகும் தொகை எல்லாம் சேமிப்பாக மாறும். வார இறுதியில் வெளியே சென்று சாப்பிடும் பழக்கம் இருந்தால், அதை குறைத்துக்கொள்ளலாம்.
செயல் திறன்
வீண் செலவை தவிர்ப்பது போலவே, எரிசக்தி பயன்பாடு போன்றவற்றில் செயல்திறன் மிக்க வழிகளை நாடி அதன் மூலமும் சேமிக்கலாம். சொந்த வாகனம் வைத்திருப்பவர்கள் எனில், வாரம் ஒரு முறை வாகனத்தை வீட்டில் வைத்துவிட்டு பொது போக்குவரத்தை பயன்படுத்தலாம். மின் விளக்குகள், ‘ஏசி’ போன்றவற்றில் செயல்திறன் மிக்க வழிகளை நாடலாம்.
‘கேட்ஜெட்’ ஆர்வம்
பலருக்கும் புதிய கேட்ஜெட்களை வாங்கும் ஆர்வம் உள்ளது. பழைய போன் நன்றாக இருந்தால் கூட, புதிய போன் மோகத்தால், விலை அதிகமான புதிய மாதிரியை வாங்குகின்றனர். இப்படி, தேவையில்லாமல் புதிய கேட்ஜெட்கள் வாங்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். இந்த தொகையை சேமிப்பாக மாற்ற வேண்டும்.
-உங்கள் வழி
இவைத்தவிர உங்களுக்கு என, பிரத்யேகமான சேமிப்பு வழியை கண்டுபிடிக்க முயலுங்கள். ஒவ்வொருவரின் செலவு பழக்கம் மாறுபட்டது என்பதால், உங்கள் செலவு பழக்கங்களை ஆய்வு செய்து, உங்கள் இலக்கு மற்றும் முன்னுரிமைகளுக்கு ஏற்ப எந்த செலவுகளை குறைத்துக்கொள்ளலாம் என, ஆராய்ந்து முடிவெடுங்கள்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|