கமாடிட்டி சந்தைகமாடிட்டி சந்தை ... தொழில் அமைப்பினர்அரசுக்கு கோரிக்கை தொழில் அமைப்பினர்அரசுக்கு கோரிக்கை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு ஆய்வு என்பது ஒரு கலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2018
00:15

பங்கு முத­லீட்டு ஆய்வு பற்­றிய புரி­த­லும், அதன்­படி நடப்­ப­தும், முத­லீட்டு வெற்­றிக்கு மிக அவ­சி­ய­மான ஒன்­றா­கும். பங்­கு­கள் குறித்து ஆய்வு செய்­ய­வும், அது குறித்து கற்று அறி­ய­வும், உரிய பயிற்­சி­யும், பக்­கு­வ­மும் தேவை.

ஆனால், இவற்றை கற்­பிக்­கும் இடங்­கள் மிக­வும் குறைவு. கற்­பிக்­கும் ஆளு­மை­களும் அதி­க­மில்லை. இருக்­கும் ஆளு­மை­களை அடை­யா­ளம் காண்­பதே ஒரு கடி­ன­மான தேடல். அந்த தேட­லில் ஈடு­ப­டவே பெரும் முயற்சி செய்ய வேண்­டும்.யாரி­டம் கற்க வேண்­டும் என்­பது எவ்­வ­ளவு முக்­கி­யமோ, அதே அளவு யாரி­டம் கற்­கக் கூடாது என்­ப­தும் முக்­கி­யம். பங்கு முத­லீடு என்­பதே, உரிய புரி­த­லோ­டும், ஆளு­மை­யின் வழி­காட்­டு­த­லோ­டும் அமைத்­துக் கொள்­ளும் தன்­னார்வ கல்வி முறை தான்.

இந்த சூழ­லில், யாரி­டம் போய் கற்­பது என்­ப­த­றி­யாத நிலை­யில், தாமா­கவே கற்­றுக்­கொள்ள வேண்­டிய நிர்ப்­பந்­தத்­திற்கு பல­ரும் தள்­ளப்ப­டு­கின்­ற­னர்.ஆர்­வத்­தின் உந்­து­தல், அவர்­களை தானா­கவே முன்­னெ­டுத்து செல்­கிறது. படிப்­ப­டி­யாக தங்­கள் புரி­தலை வளர்க்க முனை­வ­தும், தவ­று­க­ளி­லி­ருந்து பாடம் கற்­ப­தும், அவர்­களை கற்­பிக்­கப்­பட்ட முத­லீட்­டா­ளர்­க­ளாக உரு­வாக்­கு­கின்­றன.

ஆனால், முத­லீடு செய்­வோ­ரில் பெரும்­பான்­மை­யா­னோர், ஆய்வு செய்­வது எப்­படி என்றே தெரிந்து கொள்­ளா­மல், தங்­கள் ஒட்­டு­மொத்த சேமிப்­பை­யும் பங்­கு­களில் முத­லீடு செய்­கின்­ற­னர்.சொல்­லப் போனால், நம்­மு­டைய சந்­தை­யில், இவ்­வாறு இயங்­கு­வோர் தான் அதி­கம். ‘என்­னால் முடி­யும்’ என்ற தன்­னம்­பிக்கை மிகை­யின் துாண்டு­தல், அவர்­களை முன் நடத்­து­கிறது.

வேறு துறை­களில் அவர்­க­ளுக்கு உள்ள ஆளு­மை­யும், வெற்­றி­களும், முத­லீட்­டி­லும் வெளிப்­படும் என்று எண்ணி விடு­கின்­ற­னர்.ஆனால், பங்கு ஆய்வு என்­பது ஒரு கலை. பல துறை ஆளு­மை­யோடு, நடத்தை சார்ந்த பக்­கு­வ­மும் கூடும் இடம் அது.நம்­பிக்­கை­யின் அள­வீடு மிகை­யா­கா­மல் பார்த்­துக் கொள்­வது, இந்த கலை வளர்ப்­பின் முக்­கிய தேவை.

வெற்றி என்­பது, நிதா­னம் சார்ந்­தது என்­பதை பல­ரும் அறி­யா­மலே, முத­லீடு செய்ய துணி­கின்­ற­னர்.இதை உணர்ந்து, தன்­னு­டைய முத­லீட்டு அணு­கு­மு­றையை மாற்றி அமைத்­துக் கொள்­வது, ஒவ்­வொரு முத­லீட்­டா­ள­ரின் கடமை ஆகும்.வெற்­றிப் பாதையை தெரிந்து கொள்­வது எவ்­வ­ளவு முக்­கி­யமோ, அதே அளவு தோல்வி பாதை­யை­யும் அறிந்து வைத்­தி­ருக்க வேண்­டும்.

பங்கு முத­லீட்டை ஆய்வு செய்­வது எப்­படி என்­பதை அறி­யா­மலே, முத­லீட்டு முடி­வு­களை எடுக்­கும் நிலையை அடைந்­து­விட்­ட­தாக நினைப்­பதே, பல­ரு­டைய தோல்­விக்கு அடிப்­படை கார­ணம்.ஆய்வை எளி­தில் கடந்து செல்­வ­தன் மூலம், முத­லீ­டு­கள் எளிமை அடை­யாது. மாறாக, ஆய்வு குறை­பா­டு­க­ளோடு செய்­யப்­படும் முத­லீடு, அந்த தாக்­கத்­தோடு வளர்ந்து, காலம் கடந்து போன பின், நமக்கு துயர் விளை­விக்­கும்.

பிர­யா­ணங்­கள் செய்­யும் போது, எப்­படி திட்­ட­மிட்டு பய­ணிக்­கி­றோமோ, அதே அளவு திட்­ட­மி­டு­தல் முத­லீட்­டி­லும் அவ­சி­யம். தோல்­விக்கு என்று சில தெளி­வான கார­ணங்­கள் அமை­கின்­றன. அந்த கார­ணங்­களை களைந்து விட்டு செய்­யப்­படும், முறை­யான முத­லீட்டு ஆய்வு, ஒவ்­வொரு முத­லீட்­டா­ள­ரை­யும் வெற்­றியை நோக்கி பய­ணிக்க உத­வும்.அத்­த­கைய பய­ணம் மேற்­கொள்ள, நாம் அனை­வ­ரும் முயற்­சிக்க வேண்­டும்.

ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர் பங்குச்சந்தை

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)