பதிவு செய்த நாள்
07 ஆக2018
00:01

கோவை:‘சிறு, குறு தொழிற்சாலைகளை பதிவு செய்வதற்கு, மத்திய அரசு தெளிவான விதிமுறையை வகுக்க வேண்டும்’ என, கோவை தொழில் அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
கோவை கம்ப்ரசர் தொழில் அமைப்பான, ‘கொசியா’ தலைவர் ரவீந்திரன், சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கமான, ‘கொசிமா’ தலைவர் சுருளிவேல், ‘லகு உத்யோக்பாரதி’ தலைவர் கிருத்திகா, வெட்கிரைண்டர் உற்பத்தியாளர் சங்கமான, ‘கவுமா’ தலைவர் ராஜா ஆகியோர், கலெக்டரிடம் கொடுத்த மனு:மத்திய அரசு, சிறு, குறு தொழில் நிறுவன சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை தாக்கல் செய்துள்ளது.
இதில், பதிவு செய்வதற்கான உச்ச வரம்பை, 225 கோடி ரூபாய் வரை உயர்த்திக் கொள்வதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவை நீக்க வேண்டும். தற்போதுள்ள சூழலில் சிறு தொழிலுக்கு, 75 கோடி ரூபாய் உச்ச வரம்பே போதுமானது.
சிறு மற்றும் குறு தொழிற்சாலை என்று வகைப்படுத்துவதை, ஆண்டு வர்த்தகம் மாறும் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் செய்ய வேண்டுமா என தெளிவுபடுத்த வேண்டும். பதிவு செய்வதற்கான விதிமுறைகளை தெளிவாக வகுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|