பதிவு செய்த நாள்
08 ஆக2018
01:43

இந்தியாவில், மாநில அளவில் தொழில் துவங்குவதற்கான சாத்தியக் குறியீட்டில், 2018ம் ஆண்டில் தமிழகத்துக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. 2017ம் ஆண்டை விட நான்கு இடங்கள் முன்னேறி, புதிய இடத்தை தமிழகம் பிடித்துள்ளது.
ஆய்வறிக்கை
என்.சி.ஏ.இ.ஆர்., எனும் பயன்பாடு மற்றும் பொருளாதார ஆய்வுக்கான தேசிய கவுன்சில், மாநில அளவில் தொழில் துவங்குவதற்கான, சாத்தியக் குறியீடு தொடர்பான ஆய்வறிக்கையை ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.இந்த ஆண்டு, 20 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான டில்லியிலும் நடத்தியது. 2018ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை, ஆக., 3ம் தேதி, என்.சி.ஏ.இ.ஆர்., டில்லியில் வெளியிட்டது. இந்த ஆய்வறிக்கையில், தமிழகத்துக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.
இது குறித்து, தொழில்துறை மேம்பாட்டு வளர்ச்சி நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:இந்தியாவில், மாநில அளவில் தொழில் துவங்குவதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பான ஆய்வறிக்கையை, மத்திய அரசின் அதிகாரப்பூர்வ நிறுவனமான, என்.சி.ஏ.இ.ஆர்., சமீபத்தில் வெளியிட்டது.
இதன்படி, தமிழகத்துக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. இது, 2016ம் ஆண்டு மூன்றாம் இடத்தில் இருந்தது. 2017ம் ஆண்டு மூன்று இடங்கள் பின்தங்கி, ஆறாம் இடத்துக்குசென்றது.இந்நிலையில், 2018ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதில், டில்லி முதல் இடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும், குஜராத் மூன்று, ஹரியானா நான்கு, மஹாராஷ்டிரா ஐந்தாம் இடத்திலும் உள்ளன. ஆந்திரா ஏழாம் இடத்திலும், தெலுங்கானா எட்டாவது இடத்திலும் உள்ளன.
சர்வதேச மாநாடு
நிலம், தொழிலாளர்கள், தொழில் நிறுவனங்களின் கருத்து, உள்கட்டமைப்பு வசதி, பொருளாதாரம், அரசு நிர்வாகம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை ஆகிய ஆறு அம்சங்கள் மற்றும், 50 துணை குறிகாட்டிகள் அடிப்படையில், இந்த ஆய்வு நடத்தப்பட்டது.இதில், வேலைவாய்ப்பு, அரசு நிர்வாகம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை, சட்டம் – ஒழுங்கு, சட்ட ரீதியில் வழக்குகளை முடிப்பது, மின்சார தட்டுப்பாடு ஆகியவற்றில் முதல் இடத்திலும்;தொழில்நுட்ப கல்வி அறிவு பெற்ற ஊழியர்கள், உற்பத்தி துறை ஊழியர்கள் பிரிவில் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
பொருளாதார அடிப்படையில் ஒன்பதாவதுஇடத்திலும், தொழில் நிறுவனங்களில் நடத்திய ஆய்வில்,10வது இடத்திலும் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில், 2019ம் ஆண்டு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு – 2 நடைபெற உள்ள நிலையில், இந்த ஆய்வறிக்கை தமிழகத்துக்கு பலமாக அமைந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|