பதிவு செய்த நாள்
08 ஆக2018
01:44

சென்னை:மின்னணு பணப் பரிமாற்ற பரிவர்த்தனை மூலம் வசூலிக்கும் சுங்க கட்டணத்தை, ஐந்து மாதங்களில் இரட்டிப்பாக்க, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது.
இது குறித்து, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பு:தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில், கட்டணத்தை எளிதாக செலுத்துவதற்கான, ‘பாஸ்டேக்கு’கள், எனும் மின்னணு அட்டைகளை, 10 லட்சம் வரை, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி வழங்கியுள்ளது. இந்தியாவில், மொத்தம், 25 லட்சம் பாஸ்டேக்குகள் புழக்கத்தில் உள்ளன.
‘பாஸ்டேக்’ எனும் மின்னணு முறையிலான பணப் பரிமாற்ற அட்டை, வானொலி அலைகள் வழியாக இயங்கக் கூடியது. இந்த அட்டை வாகனத்தின் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருக்கும்.இதை சுங்கச் சாவடிகளில், அமைந்துள்ள சென்சார்கள், தாமாக ஸ்கேன் செய்து கட்டணத்தை வரவு வைத்துக் கொள்ளும்.
இதன் மூலம், நாடு முழுவதும், 18 லட்சம் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி மூலம் மட்டும், 11 லட்சம் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.ஒரு, ‘பாஸ்டேக்’ மூலம், பல சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்த முடியும். ‘பாஸ்டேக்’ விற்பனையை அதிகரிக்க, அரசு போக்குவரத்து நிறுவனங்கள், லாரி உரிமையாளர்களுடன் இணைந்து செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.
மின்னணு மூலம் வசூலிக்கும் சுங்க கட்டணத்தை, ஐந்து மாதங்களில் இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|