பதிவு செய்த நாள்
08 ஆக2018
01:53

புதுடில்லி:மத்திய அரசு, 328 வகை ஜவுளிகளின் இறக்குமதி வரியை, இரு மடங்கு உயர்த்தியுள்ளது.
இது குறித்து, மத்திய நிதித் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், லோக்சபாவில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இறக்குமதி செய்யப்படும், 328 ஜவுளி வகைகளின் சுங்க வரி, தற்போதைய, 10 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.உள்நாட்டு ஜவுளி உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மத்திய அரசு, கடந்த மாதம், ‘சூட், ஜாக்கெட்’ தரை விரிப்பு உட்பட, 50க்கும் மேற்பட்ட ஜவுளிகளின் இறக்குமதி வரியை, 20 சதவீதமாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.கடந்த ஜூன் மாதம், துணி, நுாலிழை மற்றும் வீடு, தொழிலக பயன்பாட்டிற்கான ஜவுளி வகைகள் இறக்குமதி, 8.58 சதவீதம் உயர்ந்து, 16.86 கோடி டாலராக அதிகரித்து உள்ளது.அதேசமயம், பருத்தி நுாலிழை, ஆயத்த ஆடைகள், கைத்தறி துணிகள் உள்ளிட்ட ஜவுளி வகைகள் ஏற்றுமதி, 24 சதவீதம் வளர்ச்சி கண்டு, 98.62 கோடி டாலராக உயர்ந்துள்ளது.எனினும், அனைத்து ஜவுளி வகைகள் ஏற்றுமதி, 12.3 சதவீதம் சரிவடைந்து, 1,350 கோடி டாலராக குறைந்துள்ளது.
இந்நிலையில், இறக்குமதி உயர்வால், உள்நாட்டில் ஜவுளி உற்பத்தி விறுவிறுப்பு அடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஜவுளி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|