பதிவு செய்த நாள்
08 ஆக2018
01:56

புதுடில்லி:வங்கி வாடிக்கையாளர்கள், எதிர்க்கட்சியினர் உள்ளிட்டோரின் கடும் எதிர்ப்பால், லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட, ‘நிதி தீர்வு – சேமிப்பு காப்பீடு’ மசோதாவை, மத்திய அரசு திரும்பப் பெற்றது.கடந்த, 2017, ஆக., 10ல், இந்த மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், ‘பெயில் இன்’ மற்றும் வங்கி டிபாசிட்டிற்கான காப்பீடு குறித்த இரு பிரிவுகளுக்கு, கடும் எதிர்ப்பு எழுந்தது.இதில், ‘பெயில் இன்’ பிரிவு, ஒரு வங்கி திவாலாகும் பட்சத்தில், அதற்கான தீர்வு நடவடிக்கையில், வாடிக்கையாளர்களையும் பொறுப்பேற்க வழி வகை செய்கிறது.இதனால், டிபாசிட் செய்த முழு தொகையும் திரும்பக் கிடைக்காது என்ற அச்சத்தில், ‘பெயில் இன்’ பிரிவை நீக்க வேண்டும் என, வங்கி வாடிக்கையாளர்கள் கோரினர்.அடுத்து, வங்கி டிபாசிட்டுகளுக்கான, 1 லட்சம் ரூபாய் காப்பீட்டு வரம்பு நீக்கத்திற்கும் எதிர்ப்பு எழுந்தது.ஆனால், வாடிக்கையாளர்களை பாதிக்காத வகையில், மசோதாவில் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதாக, மத்திய அரசு கூறியது.அத்துடன், வரைவு மசோதாவை ஆராய, பார்லி நிலைக்குழு ஆய்வுக்கும் அனுப்பி வைத்தது.எனினும், இக்குழுவின் அறிக்கை வருவதற்கு முன்பாகவே, ‘நிதி தீர்வு – சேமிப்பு காப்பீடு’ மசோதாவை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டது.அதன்படி, நேற்று லோச்சபாவில், இந்த மசோதவை திரும்பப் பெறுவதாக, மத்திய அரசு தெரிவித்தது.
புதிய மசோதா
மத்திய அரசு தாக்கல் செய்த, ‘நிதி தீர்வு – சேமிப்பு காப்பீடு’ மசோதாவில், குறிப்பாக, டெபாசிட், ‘பெயில் – இன்’ தொடர்பான அம்சங்களில், சில பிரச்னைகள் எழுந்தன. அதனால், மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளது. அடுத்து, மேம்பட்ட சட்ட பாதுகாப்புடன், புதிய மசோதா தாக்கல் செய்யப்படும்
சுபாஷ் சந்திரா, செயலர், மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|