பதிவு செய்த நாள்
08 ஆக2018
01:59

புதுடில்லி:கோல்கட்டாவைச் சேர்ந்த, ஷியாம் மெட்டாலிக்ஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டில் களமிறங்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான ஆவணங்களை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிடம் வழங்கியுள்ளது.அதில், பங்கு வெளியீட்டின் மூலம், 909 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகையில், பழைய கடன்களுடன், எஸ்.எஸ்.பி.எல்., என்ற துணை நிறுவன கடன்களை, திரும்பத் தரவும், நிர்வாக செயல்களுக்கும் பயன்படுத்த, நிறுவனம் முடிவு செய்துள்ளது.இப்பங்கு வெளியீட்டை நிர்வகிக்கும் பொறுப்பை, ஐ.சி. ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ், எடல்வைஸ் பைனான்ஷியல் சர்வீசஸ், ஐ.ஐ.எப்.எல்., ஹோல்டிங்ஸ், ஜே.எம்., பைனான்ஷியல் ஆகிய நிறுவனங்கள் ஏற்றுள்ளன.ஷியாம் மெட்டாலிக்ஸ் நிறுவனம், உருக்கு கம்பிகள், கலப்பு உலோகங்கள் ஆகியவற்றின் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு, மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில், மூன்று தொழிற்சாலைகள் உள்ளன. இவை, ஆண்டுக்கு, 2.90 லட்சம் டன் உலோகப் பொருட்கள் தயாரிக்கும் திறனுடன் செயல்பட்டு வருகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|