பதிவு செய்த நாள்
14 ஆக2018
01:14
புதுடில்லி:கடந்த ஜூலை மாதம், நாட்டின் சில்லரை பணவீக்கம், ஒன்பது மாதங்களில் இல்லாத வகையில், 4.17 சதவீதமாக குறைந்துள்ளது. இது, ஜூன் மாதம், 5 சதவீதமாக இருந்தது. எனினும், மறுமதிப்பீட்டில், 4.92 சதவீதமாக குறைத்துநிர்ணயிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு, ஜூலையில், சில்லரை பணவீக்கம், 2.36 சதவீதமாக காணப்பட்டது. இந்தாண்டு, மே மாதம், சில்லரை பணவீக்கம், 4.87 சதவீதமாக இருந்தது.கடந்த ஆண்டு, அக்டோபரில், சில்லரை பணவீக்கம், 3.58 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைந்து இருந்தது.இந்தாண்டு ஜூலையில், காய்கறிகள் பணவீக்கம், மைனஸ் 2.19 சதவீதமாக பின்னடைவை கண்டிருந்தது. இது, ஜூனில், 7.8சதவீதமாக இருந்தது.
இதே காலத்தில், மாமிசம், மீன், பால் ஆகியவற்றின் சில்லரை பணவீக்கம் குறைந்து இருந்தது. அதேசமயம், எரிபொருள் மற்றும் மின் துறையின் சில்லரை பணவீக்கம், 7.14 சதவீதத்தில் இருந்து, 7.96 சதவீதமாக உயர்ந்து உள்ளது.மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|