பதிவு செய்த நாள்
15 ஆக2018
00:34
புதுடில்லி:கடந்த ஜூலையில், காய்கறி, பழங்கள் விலை வீழ்ச்சி கண்டதால், மொத்த விலை பணவீக்கம், 5.09 சதவீதமாக சரிவடைந்துள்ளது.
இது, ஜூன் மாதம், 5.77 சதவீதம்; 2017, ஜூலையில், 1.88 சதவீதமாக இருந்தது.கடந்த ஜூலையில், உணவுப் பொருட்களின் மொத்த விலை பணவீக்கம், மைனஸ், 2.16 சதவீதமாக, பின்னடைவைக் கண்டது. இது, ஜூன் மாதத்தில், 1.80 சதவீதமாக வளர்ச்சி கண்டிருந்தது.ஜூலையில், காய்கறிகள் மொத்த விலை பணவீக்கம், மைனஸ், 14.07 சதவீதமாக சரிந்துள்ளது. இது, ஜூனில், 8.12 சதவீதமாக உயர்ந்திருந்தது.
இதே காலத்தில், பழ வகைகள் பணவீக்கம், 3.87 சதவீத வளர்ச்சியில் இருந்து, மைனஸ், 8.81 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. பருப்பு வகைகளின் பணவாட்டம், 20.23 சதவீதத்தில் இருந்து, 17.03 சதவீதமாக குறைந்துள்ளது.கடந்த ஜூலையில், சில்லரை விலை பணவீக்கம், ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு, 4.17 சதவீதமாக குறைந்துள்ளது. இது, ஜூனில், 5 சதவீதமாக அறிவிக்கப்பட்டு, மறுமதிப்பீட்டில், 4.92 சதவீதமாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|