சமூக வலைதள நிர்வாகம்ஆள் தேடும் கனரா வங்கிசமூக வலைதள நிர்வாகம்ஆள் தேடும் கனரா வங்கி ... கேரளாவில் வெள்ளப்பெருக்கு தமிழகத்தில் சரக்குகள் தேக்கம் கேரளாவில் வெள்ளப்பெருக்கு தமிழகத்தில் சரக்குகள் தேக்கம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
இ.எம்.எப்., திட்டத்தில் ரூ.43,300 கோடி மியூச்சுவல் பண்டு முதலீடுகளில் பெருகும் ஆர்வம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2018
00:13

புதுடில்லி:நடப்பு, 2018- – 19ம் நிதி­யாண்­டில், ஏப்., – ஜூலை வரை­யி­லான நான்கு மாதங்­களில், மியூச்­சு­வல் பண்டு நிறு­வ­னங்­கள், இ.எம்.எப்., எனப்­படும், பங்கு மற்­றும் பங்கு சார்ந்த மியூச்­சு­வல் பண்டு திட்­டங்­கள் மூலம், 43,300 கோடி ரூபாய் முத­லீட்டை ஈர்த்­துள்ளன.

இது குறித்து, இந்­திய மியூச்­சு­வல் பண்டு கூட்­ட­மைப்­பான – ‘ஆம்பி’ வெளி­யிட்­டுள்ள அறிக்கை:

பங்கு சந்தை ஏற்றம்

கடந்த ஜூலை­யில், மியூச்­சு­வல் பண்டு நிறு­வ­னங்­களின், இ.எம்.எப்., திட்­டங்­களில், 10,585 கோடி ரூபாய் முத­லீடு செய்­யப்­பட்­டுள்­ளது.இது, ஏப்­ர­லில், 12,409 கோடி; மே, 12,070 கோடி; ஜூனில், 8,237 கோடி ரூபா­யாக இருந்­தது.இந்­தாண்டு, மார்ச் இறுதி நில­வ­ரப்­படி, மியூச்­சு­வல் பண்டு நிறு­வ­னங்­கள் நிர்­வ­கிக்­கும், இ.எம்.எப்., திட்­டங்­களின் மதிப்பு, 7.50 லட்­சம் கோடி ரூபா­யாக இருந்­தது. இது, 10 சத­வீ­தம் உயர்ந்து, ஜூலை இறு­தி­யில், 8.30 லட்­சம் கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.

அதே­ச­ம­யம், ஜூலை­யில், மியூச்­சு­வல் பண்டு திட்­டங்­களில் இருந்து, 32 ஆயி­ரம் கோடி ரூபாய் முத­லீடு வெளி­யே­றி­யுள்­ளது.இதில், கரு­வூல பில்­கள், 'சர்­டி­பி­கேட் ஆப் டிபா­சிட், கமர்­சி­யல் பேப்­பர் ' ஆகி­யவை சார்ந்த, 31 ஆயி­ரம் கோடி ரூபாய் முத­லீ­டு­கள், திரும்­பப் பெறப்­பட்­டுள்ளன.அரசு கடன் பத்­திர முத­லீட்டு திட்­டங்­களில் இருந்து, 7,950 கோடி ரூபாய்; ‘கோல்டு எக்ஸ்­சேஞ் டிரேட் பண்டு’ மூலம், 50 கோடி ரூபாய் வெளி­யே­றி­யுள்­ளது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது

இந்­தியா புல்ஸ் அசெட் மேனேஜ்­மென்ட் நிறு­வ­னத்­தின், இ.எம்.எப்., பிரிவு தலை­வர், சுமித் பட்­னா­கர் கூறி­ய­தா­வது:முன்­னணி நிறு­வ­னங்­கள் வெளி­யிட்டு வரும், ஏப்., – ஜூன் காலாண்டு நிதி நிலை அறிக்­கை­கள், சந்தை எதிர்­பார்ப்பை பூர்த்தி செய்­யும் விதத்­தில் உள்ளன. அத்­து­டன், நாடு தழு­விய அள­வில், பருவ மழை பொழி­வும் நன்கு உள்­ளது. அத­னால், பங்­குச் சந்­தை­கள் ஏற்­றம் கண்­டுள்ளன.இது, பங்கு சார்ந்த மியூச்­சு­வல் பண்டு திட்­டங்­களில், அதிக அள­வில் முத­லீ­டு­கள் குவிய வழி வகை செய்­துள்­ளது.

விழிப்புணர்வு

மேலும், கடந்த சில ஆண்­டு­க­ளாக, மக்­க­ளி­டம், முத­லீ­டு­கள் தொடர்­பான விழிப்­பு­ணர்வு பெரு­கி­யுள்­ளது. இந்­தி­யா­வின் கட்­ட­மைப்பு வலு­வாக உள்­ளதை உணர்ந்து, மிகுந்த முதிர்ச்­சி­யு­டன், நீண்ட கால முத­லீ­டு­களை மேற்­கொள்­கின்­ற­னர். இதற்கு, எஸ்.ஐ.பி., எனப்­படும் தவ­ணை­யில் முத­லீடு செய்­யும் வச­தி­யுள்ள, மியூச்­சு­வல் பண்டு முத­லீட்டு திட்­டங்­களின் வளர்ச்சி, எடுத்­துக் காட்­டாக விளங்­கு­கிறது.

அது­மட்­டு­மின்றி, வேறு எந்த முத­லீட்டு திட்­டங்­க­ளி­லும், இரட்டை இலக்க வரு­வாய் வளர்ச்­சிக்கு வாய்ப்­பில்­லாத சூழ­லில், நீண்ட கால அள­வில், அத்­த­கைய வாய்ப்பை தரக் கூடிய, இ.எம்.எப்., திட்­டங்­களில், முத­லீ­டு­கள் குவி­வ­தில் வியப்­பே­து­மில்லை.இவ்­வாறு அவர் கூறி­னார்.
42 நிறு­வ­னங்­கள்

இந்­திய மியூச்­சு­வல் பண்டு துறை­யில், 42 நிறு­வ­னங்­கள் உள்ளன. இவை, பல்­வேறு மியூச்­சு­வல் பண்டு திட்­டங்­கள் மூலம், 23 லட்­சம் கோடி ரூபாய் முத­லீட்டை நிர்­வ­கித்து வரு­கின்றன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)