பதிவு செய்த நாள்
16 ஆக2018
23:50

ஐதராபாத் : கோட்டக் மகிந்திரா வங்கி, நடப்பு நிதியாண்டுக்குள் மேலும், 100 கிளைகளை துவங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து, வங்கியின் மூத்த செயல் தலைவர், புனீத் கபூர் கூறியதாவது: தற்போது வங்கிக்கு, 1,391 கிளைகள் இருக்கின்றன. மேலும், 2,231 ஏ.டி.எம்., மையங்களும் உள்ளன. 2019 மார்ச் மாத இறுதிக்குள்ளாக, 1,500 கிளைகள் கொண்ட வங்கி என்ற நிலையை அடைவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். தற்போதைய நிலவரப்படி, பெரு நகரங்களில் 45 சதவீதம்; நகரங்களில் 21 சதவீதம்; புறநகர்கள், கிராமப்புறங்களில், 34 சதவீதம் என்ற விகிதத்தில் வங்கி கிளைகள் அமைந்துள்ளன.
ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் படி, பெருநகரம் அல்லது நகரங்களில் ஒரு கிளையை துவங்கினால், புறநகர் அல்லது கிராமப் பகுதிகளில், ஒரு கிளையை துவங்க வேண்டும். இதை, எங்கள் வங்கி பின்பற்றி வருகிறது. மேலும், கொள்கை அளவில் துபாயில் கிளை ஒன்றை துவங்க அனுமதி பெற்றுள்ளோம். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை பொறுத்தவரை, ஜூன், 2018 நிலவரப்படி, 1.45 கோடி பேர் உள்ளனர். இதுவே, மார்ச், 2017ல், 80 லட்சம் பேராக இருந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|