பதிவு செய்த நாள்
16 ஆக2018
23:52

சிவகங்கை : தனியார் நிறுவனங்களிடம் விலை நிர்ணயித்து கொள்முதல் செய்வதில் இழுபறி நீடிப்பதால், ஊரக வளர்ச்சித் துறையில் மானிய சிமென்டிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
ஊரக வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆண்டுக்கு, 12 லட்சம் டன் சிமென்ட் தேவைப்படுகிறது. அரசு நிர்ணயித்த மானிய விலையில், 4 லட்சம் டன் சிமென்டை, தமிழ்நாடு சிமென்ட் நிறுவனம் வினியோகம் செய்கிறது. மீதி தனியாரிடம் ஒப்பந்தம் மூலம் கொள்முதல் செய்து, வினியோகம் செய்யப்படுகிறது. பிரதமர் வீடு வழங்கும் திட்டம், பசுமை வீடு திட்ட பயனாளிகளுக்கும், பல்வேறு திட்ட ஒப்பந்ததாரர்களுக்கும் மானிய சிமென்ட் வழங்கப்படுகிறது.
ஆரம்ப கட்டத்தில் ஒரு மூடை, 190 ரூபாய்க்கு வழங்கப்பட்டது. தற்போது, 266 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. வெளிச்சந்தையில் மூடை, 400 ரூபாய்க்கு மேல் விற்பதால், மானிய விலை சிமென்டிற்கு, ‘டிமான்ட்’ உள்ளது. இதனால், தனியார் சிமென்ட் நிறுவனங்கள் கொள்முதல் விலையை உயர்த்தி தருமாறு வலியுறுத்தின. இதையடுத்து, கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. சிமென்ட் மூடைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் இலவச வீடு திட்ட பயனாளிகள், ஒப்பந்ததாரர்கள் கூடுதல் விலை கொடுத்து வெளிச்சந்தையில் வாங்குகின்றனர். சிலர் பணிகளை கிடப்பில் போட்டனர்.
ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கூடுதலாக, 20 ரூபாய் விலை நிர்ணயித்து அரசு கொள்முதல் செய்ய உள்ளதாக தெரிகிறது. விரைவில் சிமென்ட் தட்டுப்பாடு குறையும்,’ என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|