பதிவு செய்த நாள்
16 ஆக2018
23:54

புதுடில்லி : தனியார் துறையைச் சேர்ந்த, மூன்று வங்கிகள் மற்றும் ஒரு பேமன்ட் வங்கியில், 100 கோடி ரூபாய் வரி மோசடி குறித்து, மத்திய, ஜி.எஸ்.டி., மற்றும் சுங்க துறையின், வரி ஏய்ப்பு தடுப்பு பிரிவு விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து, இப்பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி, வங்கிகள், ‘பிசினஸ் கரஸ்பாண்டன்’ எனப்படும் நிறுவனங்களை, இடைநிலை நிதிச் சேவைகளுக்கு நியமிக்கலாம். இந்த நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு பணப் பரிவர்த்தனை சேவைகளை, வங்கிகள் வாயிலாக அளிக்கின்றன.
இச்சேவையின் மதிப்பை குறைத்துக் காட்டி, ஜி.எஸ்.டி.,யை குறைவாகச் செலுத்தியிருப்பது, அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மொத்த சேவையின் மதிப்பில், 5 சதவீதம் மட்டுமே, ஜி.எஸ்.டி., செலுத்தியுள்ளதால், 100 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடைபெற்றிருக்கலாம் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மூன்று தனியார் வங்கிகள் மற்றும் ஒரு பேமன்ட் வங்கியில், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|