பதிவு செய்த நாள்
16 ஆக2018
23:56

புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான, மாருதி சுசூகி, கார்களின் விலையை, 6,100 ரூபாய் வரை அதிகரித்து உள்ளதாக நேற்று தெரிவித்துள்ளது.
மாருதி சுசூகியின் இந்த விலை உயர்வு, உடனடியாக நேற்று முதலே அமலுக்கு வந்துவிட்டது. பொருட்களின் விலை உயர்வு, வினியோக செலவு, வெளிநாட்டு கரன்சிகளின் மதிப்பு உயர்வு ஆகியவையே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என, மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, கடந்த மாத ஆரம்பத்தில், மாருதி சுசூகியின் விற்பனை பிரிவின் மூத்த நிர்வாக இயக்குனரான, ஆர்.எஸ்.கல்சி, விலையேற்ற வேண்டிய சூழலுக்கு வரவேண்டியதிருக்கலாம் என, தெரிவித்திருந்தார். அதிகரித்து வரும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக, சரக்குகளை அனுப்புவதற்கு அதிக செலவு ஆவதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது நிறுவனம், கார்களின் விலையில், 6,100 ரூபாய் வரை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கிடையே, சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான, மெர்சிடஸ் பென்ஸ், செப்டம்பர் மாதம் முதல், 4 சதவீதம் அளவுக்கு, விலையை அதிகரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. மகிந்திரா அண்டு மகிந்திரா, டாடா மோட்டார்ஸ், ஹோண்டா கார்ஸ் இந்தியா ஆகியவையும், இந்த மாதம் முதல் விலை அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டு உள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|