பதிவு செய்த நாள்
16 ஆக2018
23:57

புதுடில்லி : ‘நடப்பு, 2018 -– 19ம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.2 சதவீதமாக இருக்கும்’ என, இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச் நிறுவனம், மறுமதிப்பீடு செய்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: நடப்பு நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.4 சதவீதமாக உயரும் என, ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கச்சா எண்ணெய் விலையேற்றம், வேளாண் பொருட்களுக்கு, உற்பத்தி செலவை விட ஒன்றரை மடங்கு உயர்வாக, குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்துள்ளதால், மதிப்பீட்டில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மேலும், சர்வதேச நாடுகளின் உள்நாட்டு வர்த்தக பாதுகாப்பு கொள்கை, ரூபாய் மதிப்பின் சரிவு, வங்கிகளின் வாராக் கடன் குறைவதற்கான அறிகுறிகள் இல்லாதது போன்ற வற்றாலும், மதிப்பீடு, 0.2 சதவீதம் குறைக்கப்பட்டு, 7.2 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், சில்லரை மற்றும் மொத்த விலை பணவீக்கம், முறையே, 4.6 மற்றும் 4.1 சதவீதமாக மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|