பதிவு செய்த நாள்
16 ஆக2018
23:58

புதுடில்லி : ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால், நடப்பு நிதியாண்டில், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம், 2,630 கோடி டாலர் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத வகையில் சரிவடைந்துள்ளது. நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில், 80 சதவீதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்து கொள்ளப்படுகிறது. கடந்த, 2017 -– 18ம் நிதியாண்டில், 8,770 கோடி டாலர் மதிப்பிலான, 22.04 கோடி டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. இது, நடப்பு, 2018 -– 19ம் நிதியாண்டில், 22.70 கோடி டன்னாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: நடப்பு நிதியாண்டில், 1 பேரல் கச்சா எண்ணெய், 65 டாலர்; 1 டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, சராசரியாக, 65 எனக் கணக்கிட்டு, இறக்குமதி செலவு, 10,800 கோடி டாலராக உயரும் என, மதிப்பிட்டோம். ஆனால், 14ம் தேதி நிலவரப்படி, ரூபாய் மதிப்பு சராசரியாக, 67.60 ஆக உள்ளதால், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம், 11,400 கோடி டாலராக உயரும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
இந்நிலையில், ரூபாய் மதிப்பின் சரிவால், கடந்த நிதியாண்டை விட, நடப்பு நிதியாண்டில், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு, 2,630 கோடி டாலர் அதிகரிக்கும் என, தெரிகிறது. எண்ணெய் நிறுவனங்கள், தினமும், பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கின்றன. இது, முந்தைய இரு வாரங்களில் நிலவிய, கச்சா எண்ணெய் சராசரி விலை மற்றும் அன்னிய செலாவணி மதிப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
அதன்படி, இம்மாத துவக்கம் முதல், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 68.30 என்ற அளவிலேயே இருந்தது. அதனால், இந்த வாரம் பெட்ரோல், டீசல் விலையேற்றம் அதிகம் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|