உணவு பொட்டல கொள்கை; வல்லுனர் குழு மறுபரிசீலனைஉணவு பொட்டல கொள்கை; வல்லுனர் குழு மறுபரிசீலனை ... இன்போசிஸ் சி.எப்.ஓ., எம்.டி.ரங்கநாத் ராஜினாமா இன்போசிஸ் சி.எப்.ஓ., எம்.டி.ரங்கநாத் ராஜினாமா ...
அதிக எடை தாங்கும், ‘டிரக்’ தயாரிப்பு விறுவிறு; சரக்கு போக்குவரத்து செலவு குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2018
23:25

புதுடில்லி : மத்­திய அர­சின் புதிய விதி­மு­றையை பின்­பற்­றும் நோக்­கத்­தில், அதிக எடை தாங்­கும், ‘டிரக்’ வாகன தயா­ரிப்­பில், நிறு­வ­னங்­கள் தீவி­ர­மாக ஈடு­பட்­டு உள்­ளன.

அனைத்து டிரக் வாகனங்­க­ளின், ‘ஆக்­சில் லோடு’ எனப்­படும், எடை தாங்­கும் திறனை, 12 – -15 சத­வீ­தம் உயர்த்­திக் கொள்ள, மத்­திய அரசு அனு­மதி அளித்­துள்­ளது. சரக்கு போக்­கு­வ­ரத்து செலவை குறைப்­ப­தற்­கான, இந்த விதி­முறை, ஜூலை, 16 முதல் அமலுக்கு வந்­தது.

விற்பனை :
இதை­ய­டுத்து, சரக்கு போக்­கு­வ­ரத்­துக்கு அனு­மதி பெறும் அனைத்து புதிய டிரக்­கு­க­ளின் எடை தாங்­கும் திறன் சோதிக்­கப்­படும். புதிய விதி­முறைப்­படி, டிரக்­கு­க­ளின் எடை தாங்­கும் திறன் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளதா என்­பதை, வாகன சோதனை முகமை அமைப்­பு­கள் பரிசோதித்து, சான்று வழங்­கும். புதிய விதி­மு­றைப்­படி தயா­ரிக்­கப்­ப­டாத டிரக்­கு­களை, விற்­பனை செய்ய முடி­யாது. அத­னால், ‘டாடா மோட்­டார்ஸ், அசோக் லேலண்டு, எய்ச்­சர் மோட்­டார்ஸ்’ உள்ளிட்ட நிறுவனங்­கள், புதிய விதி­மு­றைப்­படி, தற்­போ­தைய டிரக்­கு­க­ளின் வடி­வ­மைப்­பில் சில மாற்­றங்­கள் செய்து, விற்­ப­னைக்கு அனுப்­பு­வ­தில் தீவி­ர­மாக கள­மி­றங்­கி­யுள்­ளன.

இந்த வகை­யில், இலகு ரக, நடுத்­தர மற்­றும் கனரக டிரக்­கு­கள், நிர்­ண­யிக்­கப்­பட்ட அதி­க­பட்ச எடையை தாங்­கும் வகை­யில், மறு­வ­டி­வ­மைப்பு செய்­யப்­ப­டு­கின்­றன. அத்­து­டன், புதி­தாக தயாரிக்க உள்ள டிரக்­கு­களை, விதி­மு­றைக்கு ஏற்ப தயா­ரிக்­கும் முயற்­சி­யி­லும் இறங்­கி­யுள்­ளன.

டாடா மோட்டார்ஸ் :
மத்­திய அர­சின் அறிவிப்பு வெளி­யான உடன், டாடா மோட்­டார்ஸ் நிறு­வ­னம், சுறு­சு­றுப்­பாக புதிய டிரக்­கு­க­ளின் வடி­வ­மைப்­பில் மாற்­றம் செய்­யத் துவங்கி விட்­டது.

எய்ச்­சர் மோட்­டார்ஸ் நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­னர், சித்­தார்த் லால் கூறி­ய­தா­வது: எங்­கள் கன­ரக டிரக்­கு­களில், 5 மற்­றும் 8 லிட்­டர் திறன் உள்ள புதிய இன்­ஜின்­கள், இதர வாக­னங்­களை விட, அதிக எடை தாங்­கும் திறன் கொண்டவை. அத­னால், தற்­போ­துள்ள மாடல்­களில், சில சிறிய மாற்­றங்­கள் செய்தால் போதும். அர­சின் அறி­விப்பு, எங்­க­ளுக்கு சாதகமா­கவே உள்­ளது. இவ்­வாறு அவர் கூறினார்.

அசோக் லேலண்டு நிறு­வ­ன­மும், புதிய விதி­மு­றைப்­படி, டிரக்­கு­க­ளின் சரக்கு தாங்­கும் திறனை உயர்த்­தும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்­ளது.

டயர் பிரச்னை :
தயா­ரிப்­பில் உள்ள புதிய டிரக்­கு­க­ளின், எடை திறனை உட­ன­டி­யாக உயர்த்த முடி­யாது. அதற்கு, வாக­னத்தை மறு­வ­டி­வ­மைப்பு செய்ய வேண்­டும். மேலும், புதிய எடை திற­னுக்கு ஏற்ற டயர்­கள், இந்­தி­யா­வில் கிடை­யாது; இறக்­கு­மதி செய்ய வேண்­டும். உள்­நாட்­டில் டயர் தயா­ரிக்க, 12- – 18 மாதங்­கள் ஆக­லாம். எனி­னும், புதிய விதி­மு­றையை பின்­பற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை துவக்­கி­யுள்­ளோம் என, மகிந்­திரா அண்ட் மகிந்­திரா நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­னர், பவன் கோயங்கா தெரி­வித்­துள்­ளார்.

கடும் நட­வ­டிக்கை :
நிர்­ண­யிக்­கப்­பட்ட அள­விற்கு அதி­க­மாக எடை ஏற்­றிச் செல்­லும் வாக­னங்­கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்­கும்படி, மத்­திய அரசு, அனைத்து மாநி­லங்­க­ளுக்­கும் உத்­த­ர­விட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)