பதிவு செய்த நாள்
21 ஆக2018
01:59

புதுடில்லி: இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பான – அசோசெம், அமெரிக்காவில் பிரதிநிதி கிளையை திறந்துள்ளது.
இது குறித்து, இக்கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:சர்வதேச போட்டியை சமாளிக்கும் வகையில் இந்திய நிறுவனங்களை வலுப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக, வர்த்தக வாய்ப்புள்ள சந்தைகளில் கிளைகள் திறக்க, கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.இதன்படி, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், ஆஸ்டின் நகரில் பிரதிநிதி கிளை அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.பவன் ஆப்ரகாம் தலைமையில் செயல்படும் இந்த அலுவலகம், முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்டோருக்கு தேவையான உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கும். இந்தியா, அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்கவும் துணை புரியும்.இந்தியா – அமெரிக்கா இடையிலான பரஸ்பர வர்த்தக உறவை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, பாதுகாப்பு, இயற்கை எரிவாயு, கல்வி, விண்வெளி தொழில்நுட்பம், ஆரோக்கிய பராமரிப்பு உள்ளிட்ட துறைகளில், இரு தரப்பு வர்த்தக வளர்ச்சிக்கான செயல்பாடுகளை, கிளை அலுவலகம் மேற்கொள்ளும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|