பதிவு செய்த நாள்
21 ஆக2018
01:59

மும்பை: ‘‘தர நிர்ணய நிறுவனங்கள், கூடுதல் தகவல்களை பெறுவதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்,’’ என, ரிசர்வ் வங்கி துணை கவர்னர், என்.எஸ்.விஸ்வநாதன் வலியுறுத்தி உள்ளார்.
அவர், மும்பையில், தேசிய வங்கி மாநாட்டில் மேலும் பேசியதாவது:ஒரு துறையின் பல்வேறு தகவல்களை திரட்டி, அதன் அடிப்படையில், நிறுவனங்களின் கடன் தகுதியை, தர நிர்ணயநிறுவனங்கள் மதிப்பிடுகின்றன.இந்நிறுவனங்களை மேலும் வலுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களுக்கு பல வகையான தரவுகள் தேவைப்படுகின்றன. ஆனால், தற்போது அவற்றை பெறுவதற்கு கட்டுப்பாடு உள்ளது. அதனால், சட்ட திருத்தத்தின் மூலம், அனைத்து வகையான தகவல்களையும் பெறும் அதிகாரம், தர நிர்ணய நிறுவனங்களுக்கு கிடைக்க வேண்டும். அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம், தர நிர்ணய நிறுவனங்கள், மேலும் வலிமையோடு செயல்படும்.இவ்வாறு அவர் கூறினார்.நிதித் துறை சார்ந்த தரவுகளை பகிர்வது போல, தங்கள் வாடிக்கையாளரின் பணப் பரிவர்த்தனை விபரங்களும், தர நிர்ணய நிறுவனங்களுடன் பகிர வேண்டும் என, தொலைதொடர்பு மற்றும் மின் துறை நிறுவனங்கள் கோரி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|