பதிவு செய்த நாள்
22 ஆக2018
00:48
புதுடில்லி : இந்தியாவின், வாகன உதிரிபாகங்கள் ஏற்றுமதியில், அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
ஏப்., – ஜூன் வரையிலான காலாண்டில், அமெரிக்காவிற்கு, 29 கோடி டாலர் மதிப்புள்ள, வாகன உதிரிபாகங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் மேற்கொண்ட ஏற்றுமதியை விட, 23.8 சதவீதம் அதிகம். நாட்டின் வாகன உதிரிபாகங்கள் ஏற்றுமதியில், துருக்கி, இரண்டாவது இடத்தில் உள்ளது. மதிப்பீட்டு காலாண்டில், துருக்கிக்கு, வாகன உதிரிபாகங்கள் ஏற்றுமதி, 28.36 சதவீதம் அதிகரித்து, 10 கோடி டாலராக உயர்ந்து உள்ளது.
இதையடுத்து, வங்கதேசம், 8 கோடி டாலர்; பிரேசில், 7.20 கோடி டாலர் மற்றும், ஜெர்மனி, 6.10 கோடி டாலர் மதிப்பிலான, வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்து உள்ளன.வங்கதேசத்திற்கான, உதிரிபாகங்கள் ஏற்றுமதி, 53 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது குறித்து, இந்திய பொறியியல் ஏற்றுமதி வளர்ச்சி கழகத்தின் தலைவர், ரவி செகல் கூறியதாவது: சமீபத்தில், அமெரிக்கா – இந்தியா இடையே, பரஸ்பர வரி உயர்வுக்கு பின், பங்கு முதலீட்டாளர்களுக்கு, வாகன ஏற்றுமதி குறித்த கவலை அதிகரித்து உள்ளது.
ஆனால், வாகன உதிரிபாகங்கள் ஏற்றுமதி சிறப்பாக உள்ளது. அமெரிக்காவிற்கான ஏற்றுமதி, 24 சதவீதம் உயர்ந்துள்ளதை பார்க்கும் போது, வர்த்தகப் போர் தாக்கம் எதுவும் இல்லை என்பதை உணரமுடிகிறது. வாகன உதிரிபாக ஏற்றுமதியாளர்கள், ருமேனியா, ஜப்பான், வியட்நாம், கொலம்பியா ஆகிய நாடுகளிலும், வர்த்தக விரிவாக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய உதிரிபாகங்கள் தரமாக உள்ளதால், வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பொறியியல் சாதனங்கள் :
நடப்பு, 2018 -– 19ம் நிதியாண்டின், ஏப்., – ஜூன் வரையிலான முதல் காலாண்டில், பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, 15.96 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,047 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலாண்டை விட, 15.96 சதவீத வளர்ச்சியாகும்
-இந்திய பொறியியல் ஏற்றுமதி வளர்ச்சி கழகம்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|