ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூ., இயக்குனராக சந்தா?ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூ., இயக்குனராக சந்தா? ... அசோசெம் அமைப்புக்கு புதிய பொது செயலர் அசோசெம் அமைப்புக்கு புதிய பொது செயலர் ...
நிதி நெருக்கடியில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள்; ஜி.எஸ்.டி., ‘ரீபண்டு’ ரூ.10,000 கோடி கிடைக்காமல் அவதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2018
02:38

புதுடில்லி : குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள், ஜி.எஸ்.டி., செலுத்­திய வகை­யில், 10 ஆயி­ரம் கோடி ரூபாய், ‘ரீபண்டு கிடைக்­கா­மல் கடும் நிதி நெருக்­க­டியை சந்­தித்­துள்­ளன.

இந்­நி­று­வ­னங்­கள், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்­கல் செய்து, மூலப்­பொ­ருட்­க­ளுக்கு செலுத்­திய வரியை, ‘இன்­புட் கிரெ­டிட்’ எனப்­படும், உள்­ளீட்டு வரிப் பய­னாக திரும்­பப் பெறு­கின்­றன.

தவறுகள் :
இந்­நி­லை­யில், ஜி.எஸ்.டி., நடை­மு­றைக்கு மாறு­வ­தில் நேர்ந்த சிர­மம், கணக்கு தாக்­கல் செய்­வ­தில் நிக­ழும் தவ­று­கள் போன்­ற­வற்­றால், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்­க­லில் கொள்­மு­தல், விற்­பனை போன்­ற­வற்­றின் விப­ரங்­களில் ஏற்­படும் தவ­று­கள் கார­ண­மாக, ஏரா­ள­மான நிறு­வ­னங்­கள், ரீபண்டு பெற முடி­யா­மல் தத்­த­ளிக்­கின்­றன.

ஜி.எஸ்.டி., கணக்கு தாக்­க­லில், பொருட்­க­ளின் கொள்­மு­த­லுக்கு செலுத்­திய வரி மற்­றும் அப்­பொ­ருட்­கள் மூலம் தயா­ரா­கும் பொருட்­க­ளின் விற்­பனை வரி குறித்த விப­ரங்­கள் சரி­யாக பொருந்­தி­னால், உள்­ளீட்டு வரிப் பயனை சுல­ப­மாக பெற­லாம்.

தாமதம் :
ஜி.எஸ்.டி., கணக்கு தாக்­கல் நடை­மு­றை­கள் அனைத்­தும், கணினி வாயி­லாக நடை­பெ­று­வ­தால், சரி­யாக பொருந்­தாத, குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளின் கணக்கு விப­ரங்­க­ளுக்கு ரீபண்டு கிடைப்­பது தாம­த­மா­கிறது. இந்த வகை­யில், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள், 10 ஆயி­ரம் கோடி ரூபாய் அள­விற்கு, உள்­ளீட்டு வரிப் பயனை பெற முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இது குறித்து, இந்­திய ஏற்­று­மதி நிறு­வ­னங்­கள் கூட்­ட­மைப்­பின், டைரக்­டர் ஜென­ரல், அஜய் சஹாய் கூறி­ய­தா­வது: ஏற்­று­ம­தி­யில் ஈடு­பட்­டுள்ள குறு, சிறு, நடுத்தர நிறு­வ­னங்­கள், உள்­ளீட்டு வரியை திரும்­பப் பெற முடி­யா­மல், கடும் நிதி நெருக்­க­டியை சந்­தித்­துள்­ளன. நாட்­டின் ஒட்­டு­மொத்த ஏற்­று­மதி, வளர்ச்சி கண்­டுள்ள போதி­லும், பலர், நடை­முறை மூல­த­னச் செல­வு­களை சமா­ளிக்க, போதிய நிதி­யா­தா­ரம் இல்­லா­மல் திண­று­கின்­ற­னர்.

பெரும்­பான்­மை­யான நிறு­வ­னங்­கள், உள் ஆதா­ரங்­கள் மற்­றும் உற­வி­னர்­கள் மூல­மா­கவே, அவற்­றின் நிதி தேவை­களை சமா­ளிக்­கின்­றன. வங்­கிக் கடன் பெறு­வ­தும், இந்­நி­று­வ­னங்­க­ளுக்கு சவா­லாக உள்­ளது. இந்­தாண்டு ஏப்­ர­லில், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் துறை­யின் வங்­கிக் கடன், 48 சத­வீ­தம் சரி­வ­டைந்­துள்­ளது. மத்­திய அரசு, உட­ன­டி­யாக இப்­பி­ரச்­னைக்கு தீர்வு கண்­டால், குறு, சிறு நிறு­வ­னங்­கள் சுறு­சு­றுப்­பாக செயல்­படும் என்­ப­து­டன், ஏற்­று­ம­தி­யும் அதி­க­ரிக்­கும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

ஏற்­று­மதி பாதிக்­கும்:
குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு, குறித்த காலத்­தில் உள்­ளீட்டு வரியை திரும்ப அளிக்க, நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். வரி செலுத்தி விட்டு, நடை­முறை செல­வு­களை சமா­ளிக்க, உள்­ளீட்டு வரிப் பய­னைத் தான் நிறு­வ­னங்­கள் எதிர்­நோக்­கி­யுள்­ளன. திரும்ப வர வேண்­டிய தொகை, அதிக அள­வில் நிலு­வை­யில் இருந்­தால், ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் பணத் தட்­டுப்­பாடு கார­ண­மாக, மூலப்­பொ­ருட்­களை கொள்­மு­தல் செய்­வதை நிறுத்த நேரி­டும். இத­னால் உற்­பத்தி பாதித்து, ஏற்­று­மதி சரி­வ­டை­யும்.

-எம்.எஸ்.மணிபங்­கு­தா­ரர், ‘டெலாய்ட் இந்­தியா’

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)