பதிவு செய்த நாள்
24 ஆக2018
06:31
புதுடில்லி : அசோசெம் எனும், இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் புதிய பொதுச் செயலராக, உதய் குமார் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த, 14 ஆண்டுகளாக, டி.எஸ்.ராவத் இப்பதவியை வகித்து வந்த நிலையில், அவரை அடுத்து புதிய பொதுச் செயலராக, உதய் குமார் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்கும் வர்மா, இதற்கு முன், தகவல் மற்றும் ஒலிபரப்பு துறையின் செயலராக பதவி வகித்து ஓய்வு பெற்றவராவார். மேலும், மத்திய – மாநில அரசுகளில் பல்வேறு முக்கிய உயர் பதவிகளையும் வர்மா வகித்துள்ளார்.
இது குறித்து, அசோசெம் கூட்டமைப்பின் தலைவர், சந்தீப் சஜோடியா கூறியதாவது: டாக்டர் ராவத், பொதுச் செயலராக பதவி வகித்து வந்த காலகட்டத்தில், அரசுக்கும், தொழில் அமைப்புகளுக்கும் இடையே உள்ள இணைப்பை வலுவாக்கினார். மேலும், இக்கூட்டமைப்பை அனைத்து தொழில் துறைகளையும் உள்ளடக்கியதாக மாற்றி, உலக அளவில் வர்த்தக விரிவாக்கத்தை ஏற்படுத்த காரணமாக இருந்தார். புதிதாக பொறுப்பேற்கும் வர்மா, அவர் பொறுப்பேற்ற அனைத்து பதவிகளிலும் மிகச் சிறந்த வகையில் செயலாற்றி வந்தவர்; சிறந்த நிர்வாகி. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|