பதிவு செய்த நாள்
24 ஆக2018
06:32

புதுடில்லி : ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தலைமை செயல் அதிகாரி, சந்தா கோச்சார் மீதான புகார்கள் தொடர்பான விசாரணை குழு அறிக்கை, இரண்டு மாதங்களில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
வீடியோகான் நிறுவனத்திற்கு, 3,600 கோடி ரூபாய் கடன் வழங்கி, தன் கணவர் தீபக் கோச்சாரின் நிறுவனம் ஆதாயம் பெற உதவியதாக, சந்தா கோச்சார் மீது, புகார் உள்ளது.இது தொடர்பாக, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி, ஸ்ரீகிருஷ்ணா தலைமையில், விசாரணை குழு அமைத்து உள்ளது.
‘‘இக்குழுவின் அறிக்கை, அடுத்த இரண்டு அல்லது இரண்டரை மாதங்களுக்குள் கிடைக்கும்,’’ என, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தலைவர், ஜி.சி.சதுர்வேதி தெரிவித்து உள்ளார்.வீடியோகான் கடன் மோசடி தொடர்பாக, அமலாக்க இயக்குனரகம், சி.பி.ஐ., ‘செபி’ உள்ளிட்ட அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.
ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை வந்த பிறகே, அனைத்து அமைப்புகளின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க முடியும் என, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தெரிவித்துள்ளது. கடந்த, 2009ல், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக, சந்தா கோச்சார் பொறுப்பேற்றார். வீடியோகான் விவகாரம் காரணமாக, கடந்த ஜூன் முதல் விடுப்பில் உள்ள இவரின் பதவிக் காலம், 2019, மார்ச்சுடன் முடிவு அடைகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|